பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாயன்மார் கதை

வன்னத் தரிசித்து எப்போதும் அஞ்செழுத்தை ஓதி இன் புற்று இறுதியில் சிவபெருமான் திருவடி நீழலில் ஒன்றினர்.

32. மூர்க்க நாயனர்

சான்ருேர் பலர் வாழும் தொண்டை கன்னட்டில் பாலாற்றின் வடகரையில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அங்கே வேளாண் மரபில் உதித்த ஒருவர் சிறந்த சிவனடியாராக விளங்கினர். திருகீற்றைச் செல்வ மாகப் போற்றிச் சிவபெருமானே வழிபட்டு வாழ்ந்த அவர் அடியார்களிடத்தில் அளவற்ற அன்புடையவ ரானர். நாள்தோறும் அடியார்களுக்கு ஆறு சுவையும் பொருந்திய அமுது செய்வித்துப் பின்பே உண்ணும் வழக்கத்தை மேற் கொண்டார். இந்த வரையறையினின்றும் ஒருநாளும் வழு வாமல் ஒழுகி வந்தார்.

அவர் அமுது செய்விக்கிருர் என்ற செய்தி நாடு எங்கும் பரவியது. அது கேட்டு நாளுக்கு நாள் மிகுதியான சிவனடியார்கள் அவரை காடி வரத் தலைப்பட்டார்கள். அவர்கள் யாவருக்கும் முகம் கோளுமல் விருந்துணவு அருத்திப் பின்பு எஞ்சியதை உண்டு இன்புற்ருர் அவ் வன்பர். கணக்குக்கு மிஞ்சிய அடியார்கள் வந்தமையால் அவரிடம் உள்ள பொருள் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியது. கிலத்தை விற்றும் பண்டங்களை விற்றும் தம்முடைய குறிக்கோள் தவருமல் கடந்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின் விற்பதற்கு ஒரு பொரு ளும் இல்லாத கிலே வந்தது. தாம் உண்ணுமல் பட்டினி யாகக் கிடந்தாலும் அடியார்களுக்கு விருந்து செய்யாமல் வாழ இயலாது என்ற உறுதியை உடையவர் அவர். இனி என் செய்வது என்று ஆராய்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/16&oldid=585649" இலிருந்து மீள்விக்கப்பட்டது