பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - நாயன்மார் கதை

யாக அவர் பொருள் சட்டினர். தாம் வென்றபோது பொருளேத் தர மாட்டோம் என்று யாரேனும் முரண் செய்தால் அவர்களே அச்சுறுத்தியும் உடைவாளால் குத்தி யும் பொருளைப் பெறுவார். இதல்ை அவருடன் சூது ஆடு பவர்கள் ஏமாற்ற மாட்டார்கள். அவரிடம் மிகவும் அச்சம் கொண்டிருந்தார்கள். அவருடைய இயல்பு கண்டு யாவரும் அவரை மூர்க்கர் என்று வழங்கத் தொடங்கினர். அது முதல் அவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரி பாமல் மறைந்து போயிற்று. -

குதில் தாம் ஈட்டிய பொருளேக் கொண்டு உணவுக் குரிய பண்டங்களே வாங்குவார்; சமையல்காரர்களேத் திட்டம் செய்வார்; நாள்தோறும் அடியவர்களுக்கு அமு தூட்டுவார். ஒவ்வொரு நாளும் பல பந்திகள் கடை பெற்றும், அவர் தமக்கென்று அப்பொருளிற் சிறிதும் எடுத்துக் கொள்வதில்லை. எல்லோரும் உண்ட பிறகு கடைப் பக்தியில் அவர் இருந்து உண்ணுவார்.

தம்முடைய கடைப்பிடியை விடாமல், குதில்ை பொருள் பெற்றபோது பொருளாசை பெருமல், அடியவர் களே அருத்துவது ஒன்றையே வாழ்க்கைப் பயணுகக் கொண்ட மூர்க்க நாயனர் இறுதியில் இறைவன் திரு வடியை அடைந்து பேரின்ப வாழ்வு பெற்ருர்.

33. சோமாசி மாற நாயனர்

எங்கே பார்த்தாலும் பசுஞ்சோலை ; கல்லோர்களின் உள்ளம்.போலக் குளிர்ச்சியைத் தரும் பூம்பொழில்கள். மாமரங்கள் தழைத்து மலர்ந்து கிற்கின்றன. இத்தகைய வளம் பொருந்தியது அம்பர் என்ற திருத்தலம், சோழ காட்டுப் பழம்பதிகளில் ஒன்று அது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/18&oldid=585651" இலிருந்து மீள்விக்கப்பட்டது