பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமாசி மாற நாயனுர் 13

அங்கே வேதியர் குலத்தில் வந்தவர் மாறர் என்பவர். இறைவனுக்கு அன்பர்கள் யார் வரினும் அவர்களுடைய திருவடியைப் பணிந்து அமுதூட்டுவதைத் தம் கடமை யாகக் கொண்டு வாழ்ந்தார். இறைவனே எண்ணி அவரைப் போற்றி யாகம் பல புரிவதல்ை எழுலகில் உள்ள உயிர்களும் நன்மை அடையும். அப்படிச் செய்வதன் பயனகவே இறைவனே மறவாமல் வாழ்த்தும் வாழ்க்கை கிடைக்கும் ' என்ற உறுதி பூண்டு அவர் வேள்விகள் பல செய்தார். பல சோம யாகங்களைச் செய்தமையால் அவரைச் சோமயாஜி என்றே யாவரும் அழைக்கலாயினர். சோமாசி மாறகாயனர் என்று மதிப்புடன் சிவனடியார் வழங்குவர். -

ஈசனுக்கு அன்பரானவர்கள் எந்த இயல்புடன் இருங் தாலும் அவரே நம்மை ஆட்கொள்ளும் தகுதி உடையவர் என்ற உறுதிப்பாடு உடையவர் அவர். சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தை மறவாமல் செபித்து இன்புறுகிறவர். சிவபெருமான் உறையும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கமும் அவரிடம் இருந்தது. ஒரு முறை திருவாரூருக்குச் சென்றிருந்தபோது அங்கே சுங்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு எழுந்தருளி யிருப்பதை அறிந்தார். அப்பெருமானுடைய பக்திச் சிறப்பையும் பிற பெருமைகளையும் கன்கு உணர்ந்து அவரை அணுகிப் பாதம் பணிந்து வழிபட்டார். சிவனடியாரிடம் அளவற்ற அன்பு கொண்ட சோமாசி மாறரிடம் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்கு அன்பு உண்டாயிற்று. இருவரும் நண்பர்களா யினர். - *

இறைவன்பாலும் அடியார்களிடமும்முறுகிய அன்பு பண்ட சோமாசி மாற நாயனர் சுந்தரமூர்த்தி சுவாமி களிடம் மிக்க பக்தியுடையவராகித் தொண்டு புரிந்து வாழ்ந்தார். பின்பு இறைவன் திருவருளிற் கலந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/19&oldid=585652" இலிருந்து மீள்விக்கப்பட்டது