பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாயன்மார் கதை

34. சாக்கிய நாயனா

சிங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றிய சிவனடியார் சாக்கிய காயனர். அவர் காஞ்சி புரம் சென்று அங்குள்ள பெளத்தர்களோடு பழகிச் சாக்கிய தர்மத்தையே மேற்கொண்டார். பின்னும் பல சமய நூல்களையும் ஆராய்ந்து பார்த்துச் சிவநெறியே நல்ல இன்பம் பெறுவதற்கு ஏற்ற வழியென்று தெளிந்தார். சிவபெருமானிடம் அவருக்கு அன்பு தோன்றி வளர்ந்து வந்தது. பெளத்த வேடத்தில் இருந்தாலும் அவர் உள்ளம் சிவபெருமான் உறையும் கோயிலாகியது.

நாள் தோறும் சிவலிங்க தரிசனம் செய்து பிறகே உண்ணவேண்டும் என்ற விரதத்தை அவர் மேற்கொண் டார். சாக்கிய வேடத்தில் இருந்த அவர் திருக்கோயிலில் புக யாரும் உடம்பட மாட்டார். தம்முடைய விரதம் கிறைவேற வழியின்றித் தவித்த அவருக்குப் பரந்த வெளியொன்றில் பூசையின்றிக் கிடந்த ஒரு சிவலிங்கம் நேர்பட்டது. அதைக் கண்டவுடன் அவருக்கு உண்டான ஆனந்தத் துக்கு அளவில்லை. ‘புறத்தில் சாக்கியளுகவும் அகத்தில் சைவளுகவும் இருக்கும் நமக்கு ஏற்ற வகையில் இந்தப் பெருமான் கிடைத்தாரே! இது அவன் திருவருளே’ என்று உணர்ச்சி விஞ்சியவராய்ச் சிவலிங்கத்தை அணுகினர். அருச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. வெறும் வெளியில் ரோ, பூவா, இலேயா, ஒன்றும் கிடைக்க வில்லை. அருகிலே இருந்த சிறு கல்லே எடுத்து அதையே மலராகப் பாவித்து எறிந்தார். -

தன்னே விட்டுச் சென்ற குழந்தை வந்து இகழ்வதற் குரிய செயலைச் செய்தாலும் அதனைப் பொருட் படுத் தாமல் தாய் அக் குழந்தைக்கு இன்பம் செய்வது போல, சிவபெருமான் சாக்கியர் அன்பைக் கண்டு திருவுள்ளம் உவந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/20&oldid=585653" இலிருந்து மீள்விக்கப்பட்டது