பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாக்கிய நாயனுர் 15

மறுநாளும் அவர் அவ்விடம் வந்து சிவலிங்கப் பெரு மானைத் தரிசித்தார். முதல் நாள் அப் பெருமானேக் கண்ட உவகைப் பெருக்கினுல் கல்லேயே மலராக விசி எறிந்த செயலே வினேந்து பார்த்தார். இதுவும் சிவபெருமா னுடைய ஆணேயில்ை நிகழ்ந்தது போலும் அந்த எண்ணம் தோன்றியதற்கு வேறு காரணம் இல்லை. புறச் சமயத்துக் குரிய வேடம் புனேந்திருக்கும் கான் மலரால் பூசை செய்தால் அயலார் என்னே ஏசுவார்கள். கல் எறிந்தால் புறச் சமயத்தான் வெறுப்பினுல் செய்வது என்று எண் னிக்கொள்வார்கள்; கம்மைத் தவறு சொல்லமாட்டார்கள். இதல்ைதான் இப்படி ஒர் எண்ணத்தை எம்பெருமான் எனக்குத் தோன்றச் செய்தான் என்று சிந்தித்தார். ஆகவே அன்றும் சிறு கற்களை எடுத்து அந்தச் சிவலிங்கத் தின்மேல் வீசி எறிந்துவிட்டுச் சென்ருர். அது முதல் ஒவ் வொரு நாளும் உண்ணுவதற்கு முன் மறவாமல் அந்த வெளியில் இருந்த சிவபிரான் மேல் கல்லே எறிந்து பின்பே உண்ணுவார். இந்த விரதத்துக்கு இழுக்கு வராமல் ஒழுகி வந்தார்.

ஒருநாள் - இறைவன் திருவருள் நியதிபோலும்-அவர் இந்த ஒழுங்கை மறந்துபோய் உணவுகொள்ள உட்கார்ந்து விட்டார். அப்போது பளிச்சென்று கல்லருச்சனையினைவுக்கு வந்தது. ஐயோ! என்ன காரியம் செய்யப் புகுந்தேன்! இன்று எம்பெருமான்மேல் கல்லே வீச மறந்துபோய் விட்டேனே! என்று கைந்து எழுந்து, அன்பு உந்த மிக்க விரைவாகச் சிவலிங்கத்தை நோக்கிப் புறப்பட்டார்.

சிவலிங்கப் பெருமானிடம் ஆராத காதல் கொண்டு ஒடினவர், வழக்கம்போல் ஒரு கல்லே எடுத்து வீசினர். தாம் மேற்கொண்ட விரதத்தினின்றும் வழுவாது அன்பிலே சிறந்து விற்கும் சாக்கிய நாயனுளின் உள்ளப் பண்பை அறிந்த எம்பெருமான் விடையின் மேல் உமாதேவியா ரோடும் எழுந்தருளிக் காட்சி கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/21&oldid=585654" இலிருந்து மீள்விக்கப்பட்டது