பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 . நாயன்மார் கதை

இடைவிடாது உள்ளக் கோயிலில் எம்பெருமான வைத்து இறைஞ்சும் சாக்கிய நாயனருக்கு இறைவன் சிவலோகத்தில் மீளா அடிமையாக கிற்கும் பாங்கை அருளி ஆட்கொண்டான்.

தாம் மேற்கொண்ட செயல் தம் கிலேக்கு ஏற்றதென்று அதை விரதமாகக் கடைப்பிடித்த சாக்கிய நாயன. ருடைய செயல் வியப்பதற்குரியது. அவர் உள்ளத்தே அன்பு கிறைந்திருந்தமையால் அவர் எறிந்த கல் இறைவ. னுக்கு மனமலர் ஆயிற்று. புறச் செயலைக் காட்டிலும் உள்ளன்பே எம்பெருமானுடைய திருவருகிளப் பெறு வதற்கு உரிய கருவி என்பதைச் சாக்கிய நாயனர் வரலாறு காட்டுகிறது. .

35. சிறப்புலி நாயனர்

சோழ வளநாட்டில் நீர்வளமும் நிலவளமும் மிக்கு விளங்குவது, ஆக்கூர். அங்குள்ள திருக் கோயிலுக்குத் தான்தோன்றி மாடம் என்று பெயர். திருஞான சம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகங்களை உடையது அவ்வூர்.

'அங்கம் ஆருேடும் அருமறைகள் ஐவேள்வி

த்ங்கிஞர் ஆக்கூர்' . "தான்மறையோ டாதங்கம் பலகலைகள்

தாங்கிஞர் ஆக்கூர்' என்று சம்பந்தர் அத் தலத்திலுள்ள அந்தணர்களைப் பாராட்டியுள்ளார். அப்படியே அங்குள்ள வேளாளரை, வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூர்

என்றும், கொடையாளரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/22&oldid=585655" இலிருந்து மீள்விக்கப்பட்டது