பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாயன்மார் கதை

பேதைமையைப் பொறுத்தருள வேண்டும். தங்கள் பெருமை இத்தனே காலம் எனக்குத் தெரியாமல் போயிற்று' என்று இரங்கினன் அரசன்.

பரஞ்சோதியார் மன்னனெதிர் வணங்கி, 'எனக்கு எங்தத் தொழிலில் உரிமை உண்டோ அதனே கான் செய் தேன். அப்படிச் செய்வது என் கடமை அல்லவா ? அதில் என்ன தீங்கு எனக்கு உண்டாகும் ' என்று பணி வுடன் கூறினர். -

அரசன் அவரைக் கும்பிட்டு, 'இனித் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே கான் எவல் இடமாட்டேன். தங்கள் விருப்பப்படியே இருந்து எங்களுக்கு அருள்புரிய வேண்டும்' என்று சொல்லி, பொன்னும் பொருளும் வழங்கினன். அவர் வாழ்க்கைக்கு ஒரு குறையும் வாராத வண்ணம் இறையிலி விலங்களே அளித்தான்.

"இதுவும் இறைவன் திருவருள் ' என்று எண்ணிய பரஞ்சோதியார், அவ்வூரில் உள்ள கணபதிச்சரம் என் னும் திருக்கோயிற்குச் சென்று வழிபட்டுச் சிவபக்தியிலும் அடியார் பக்தியிலும் மேன்மேலும் சிறந்து கின்ருர். பின்பு நல்ல குடியிலே பிறந்த வெண்காட்டு கங்கையென்னும் பெருமாட்டியை மணந்து, இல்லறத்தை முறைப்படி கடத்தத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் சிவனடி யாரைப் பணிந்து அவர்களுக்கு உணவூட்டிப் பின்பே உண்ணும் வரையறையை மேற்கொண்டார். அவ ருடைய விருப்பத்துக்கு இசைக்தவாறே வெண்காட்டு கங்கையாரும் வேண்டுவன செய்ய, அவர்களுடைய இல்ல றம் எதலுைம் குறைவின்றி கன்கு நிகழ்ந்து வந்தது.

புகழாலும் கிலேயாலும் பலர் போற்ற வாழ்ந்த பரஞ்சோதியார், அடியார்களிடம் மிகவும் பணிவாக ஒழுகி அவர்களிடம் பயபக்தியோடு பழகினர். எல்லா வற்றிலும் பெரியவராகிய அவர் சிறியவரைப் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/26&oldid=585659" இலிருந்து மீள்விக்கப்பட்டது