பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நாயன்மார் கதை

"பெண்கள் மட்டும் உள்ள இடத்தில் நாம் வருவ தில்லை" என்று சொல்லி அவர் புறப்படும்போது, சிறுத் தொண்டர் மனைவியாராகிய திருவெண்காட்டு கங்கையார் வந்து, "இதோ அவர் வந்துவிடுவார்; தாழ்க்கமாட்டார்” என்று சொன்னர். "நாம் சிறுத்தொண்டரைக் காணுவ தற்காக வந்தோம். அவர் இல்லாத சமயத்தில் இங்கே இருக்கமாட்டோம். இவ்வூர்த் திருக்கோயிலில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருக்கிருேம். அவர் வந்தால் சொல் லுங்கள்" என்று சொல்லி அவர் போய்விட்டார்.

சிறிது நேரங் கழித்துச் சென்று சிவனடியார் யாரை யும் காணுமல் வாட்டத்தோடு வந்த சிறுத்தொண்டரிடம் அவர் மனைவியார், பைரவத் திருக்கோலத்திலிருந்த அடி யார் வந்துபோன செய்தியைத் தெரிவித்தார். உள்ளங் களிகூர்ந்த அவர் உடனே திருக்கோயில் சென்று பைரவ ரைக் கண்டு சின்ருர், j

அப்போது பைரவர், "நீர்தாம் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ?' என்று கேட்டார். -

"அடியேனுக்கு ஒரு தகுதியும் இல்லாவிட்டாலும் அந்தப் பெயரால் அன்பர்கள் அழைப்பதுண்டு. இன்று சிவனடியார் யாரையும் காணவில்லையே என்று வருந்தி யிருந்த எனக்கு நீங்கள் கிடைத்தீர்கள். அடியேன் இல் லத்துக்கு எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்" என்று பணிந்து வேண்டிஞர் சிறுத்தொண்டர்.

"நாம் வடகாட்டில் உள்ளோம். உம்மைக் காண வந்தோம். எமக்கு வேண்டிய உணவை வழங்குதல் உம் மால் முடியாது.” -

சிவனடியார்களுக்குக் கிடைக்காத பொருளும் உண்டோ தங்களுக்கு எந்த வகை உணவு வேண்டும் என்று அருளுங்கள்." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/28&oldid=585661" இலிருந்து மீள்விக்கப்பட்டது