பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுத்தொண்ட நாயனுர் 23.

"நாம் ஆறுமாதம் உண்ணுமல் இருந்து பிறகு பசுவை அடித்து உண்ணுவது வழக்கம். இன்று அப்படி உண்ண வேண்டிய நாள். உம்மால் அப்படிச் செய்ய முடியாது.”

“என்னிடம் ஆடு மாடு எருமையென மூன்று சிரை களும் இருக்கின்றன. தேவரீருக்கு எத்தகைய பசு வேண்டுமோ, அதைத் தெரிவித்தால் வீட்டுக்குச் சென்று அதனை அமைக்கச் செய்துவிட்டுக் காலம் தவருமல் இங்கே வந்து அழைத்துச் செல்வேன்.”

"சொன்னல் உமக்கு விநோதமாக இருக்கும். நாம் உண்ணுவது பசுமாடு அன்று; காபசுவையே உண்போம். ஐந்து பிராயமுள்ள குழந்தையாக, உடம்பில் மறு ஏதும் இல்லாதவகை இருக்க வேண்டும். இன்னும் வேண்டிய தைச் சொன்னல் நீர் வருந்துவீர்.”

“அருமையான பொருள் என்று ஏதும் இல்லை. விரைவில் தாங்கள் வேண்டியதைச் சொல்லவேண்டும்.'

"ஒரு குடிக்கு ஒரு மகளுக உள்ளவனைத் தக்தை அரியத் தாய் பிடிக்க வேண்டும். அவர்கள் மனமுவந்து கறி சமைத்துத் தந்தால் அதை நாம் உண்போம்" என்ருர் பைரவர்.

'இது எனக்கு அரிதன்று; அப்படியே செய்வேன்' என்று கூறி விடை பெற்றுக்கொண்ட சிறுத்தொண்டர், கேரே வீடு சென்ருர். சென்று தம் மனேவியாரை அழைத்து, 'தொண்டர் பிரான் நம் இல்லத்தில் அமுது செய்யத் திருவுள்ளம் இசைந்தார். ஐந்து பிராயமுடைய வய்ை, ஒரு குடிக்கு ஒரு மகளுய், உறுப்புக் குறைவு இல் லாதவகை உள்ள குழந்தையைத் தாய் பிடித்துக் கொள்ள, தங்தை அரிந்துதர, கறி சமைத்துக் கொடுக்க வேண்டுமாம்."

"அப்படி ஒரு சிறுவனே எங்கே பெறுவது' என்று கேட்டார் நங்கையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/29&oldid=585662" இலிருந்து மீள்விக்கப்பட்டது