பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. நாயன்மார் கதை

"இத்தகைய மைக்தன் ஒருவனே விலேகொடுத்தால் கூடத் தரமாட்டார்கள். அப்படி அளித்தாலும் தாயும் தந்தையும் இருந்து அரிய மாட்டார்கள். நீ பெற்ற பிள்ளை யைத்தான் அழைத்துவர வேண்டும்” என்ருர் சிறுத் தொண்டர்.

இல்வாழ்வுக்குத் துணையாக நின்ற அப்பிராட்டியார் சிறிதும் தடையின்றி இசைந்து, 'பள்ளியிலிருந்து அவனே அழைத்து வாருங்கள்' என்ருர். r

அப்படியே அழைத்து வந்து ரோட்டி, தாய் பிடித்துக் கொள்ள, சிறுத்தொண்டர் தலையை அரிந்து உறுப்புக் களையும் வெவ்வேறு அரிந்து தர, வெண்காட்டு கங்கையார் அவற்றைப் பெற்றுச் சமைக்கப் புகுந்தார். தலே கறிக்கு ஆகாதென்று தனியே வைத்துவிட்டார். அதனைச் சந்தன கங்கை எடுத்துச் சமைத்து வைத்தாள்.

சமையல் முடிந்தவுடன் மனேவியார் கூறச் சிறுத் தொண்டர் பைரவரை அழைப்பதற்குத் திருக்கோயிலுக் குச் சென்ருர். அவரை வணங்கி, "காலக் தாழ்த்ததைப் பொறுத்து, அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளவேண் டும்” என்ருர். அவர் உடன் வர, அழைத்துச் சென்று இருக்கை தந்து அவர் திருவடியை நீரால் விளக்கி அந்த ைேரத் தம் தலையின் மேல் தெளித்துக்கொண்டு பேதுரபங் காட்டிப் பூசை செய்தார்; பின்பு, "எவ்வாறு உணவு படைக்கவேண்டும்' என்று கேட்டார். "எல்லாவற்றை யும் ஒருங்கே படையும்" என்று பைரவர் கூறினர்.

அப்படியே படைத்தபின், 'கான் சொன்ன முறைப் படியே காபசுவை அடித்து எல்லா உறுப்புக்களேயும் கொண்டு சமைத்திரோ?” என்று கேட்டார் பைரவர். தொண்டர்தம் மனேவியார், "தலைக்கறி ஆகாது என்று சமைக்கவில்லை" என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/30&oldid=585663" இலிருந்து மீள்விக்கப்பட்டது