பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுத்தொண்ட நாயனுர் 25.

"அதையும் நாம் உண்பதுண்டு" என்று அவர் சொல்ல, சிறுத்தொண்டர், "இதற்கென் செய்வேன்' என்று வருக் தும்போது, "நான் அதையும் சமைத்து வைத்தேன்' என்று சந்தன. கங்கை சொல்லி எடுத்துத் தந்தாள்.

சிறுத்தொண்டர் முகமலர்ந்து அதையும் படைத்தார். வந்த அடியார், "காம் தனியே உண்ணுவது இல்லை. ஈச னடியார் யாரேனும் அருகில் கின்ருல் அழைத்து வாரும்' என்று சொல்ல, அவர் வெளியே சென்று பார்க்க, யாரும் கிடைத்திலர். அதை அவர் பைரவரிடம் சொல்ல. “உம்மை விட வேறு அடியார் யார் உள்ளார்? நீர் அமரும்' என்று சொல்ல, அவர் அவ்வாறே அமர்ந்தார். அவருக்கும் கலம் திருத்தி, பைரவர் கூறியவாறே எல்லாக் கறியும் அவர் கலத்தில் இட்டனர் திருவெண் காட்டம்மையார்.

அடியாருக்கு இட்டு உண்பது என் விரதம் என்று பைரவர் சொன்னமையால், அவர் உண்ணவேண்டும் என்ப தற்காக, முன்னே சிறுத்தொண்டர் உண்ணத் தொடங் கினர். பாசம், வெறுப்பு, அருவருப்பு, பற்று ஆகிய எல்லா வற்றையும் கடந்து, சிவனடியார் திருவுள்ளம் கூசாமல் ஒழுகவேண்டும் என்ற ஒன்றையன்றி மற்ற யாவற்றையும் மறந்த நிலையில் அவர் இருந்தார்.

அப்போது பைரவர் அவரைத் தடுத்து, "ஆறுமாத மாகப் பட்டினி கிடக்கும் நான் இன்னும் உண்ணுமல் இருக்க, காள்தோறும் சோறுண்ணும் நீர் அவசரப்படு கிறீரே! இரும். இன்னும் ஒன்று உண்டு. நீர் மகனைப் பெற்றவராக இருந்தால் அந்தக் குழந்தையையும் அழை யும்; சேர்ந்து உண்ணலாம்” என்று கூறினர்.

சிறுத்தொண்டர் உண்மை கூறத் துணியாதவராய், 'அவன் இப்போது உதவான்' என்ருர்.

'அவன் வந்தால்தான் காம் உண்போம். அவனைப் போய்த் தேடி அழைத்து வாரும்” என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/31&oldid=585664" இலிருந்து மீள்விக்கப்பட்டது