பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாயன்மார் கதை

வருவேன்' என்று சொல்லித் திருவஞ்சைக் களத்தப்பன் முன் சென்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார். அப் பெருமான் பெருமாக் கோதையாருக்குத் திருவருள் பாலித்து, எல்லா விலங்குகளும் பேசும் மொழிகளே அறியும் ஆற்றலை அருளிஞ்ன்.

அதன்பின் அவர் முடி சூடி மன்னராக ஆட்சிபுரியத் தலைப்பட்டார். விலங்குகளின் மொழியை உணரும் ஆற்றல் பெற்றமையால் கழறிற்று அறிவார் என்னும் திருநாமம் அவருக்கு உண்டாயிற்று.

சேரமான் பெருமாள் என்ற பெயரோடு அவர் ஆட்சி புரியலானர். அவர் வஞ்சி நகரை வலம்வரும் போது, யாரோ ஒரு வண்ணுன் உவர் மண்ணேத் தலையிற் சுமந்து செல்ல, மழையில்ை அது உடம்பின் மேல் வழிந்து காய்ந்து, றுே பூத்திருக்கும் கோலத்தோடு எதிரே வந்துகொண் டிருந்தான். உடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு வருவதாக எண்ணிய சேரமான் உடனே யானையினின்றும் இறங்கி அவன் அடியைப் பணிந்தார். அதுகண்டு அஞ்சிய அவன், ‘‘அடியேன் அடிவண்ணன்' என்று சொல்லி ஒதுங்கினன். மன்னரோ, "அடியேன் அடிச் சேரன். நீர் திருநீற்றை கினைப்பித்தீர்' என்று சொல்வி அளவளாவி னர். இது கண்டு யாவரும் வியப்படைந்து, சேரமான் பெருமாளுடைய பக்தி விசித்திரத்தைப் பாராட்டினர்கள். மதுரையில் பாணபத்திரர் என்னும் பாணர் காள் தோறும் சொக்கலிங்கப் பெருமானே வழிபட்டு அவர் திரு முன் யாழ் வாசித்துத் தொண்டு புரிந்து வந்தார். அவர் வறுமையால் வாடுவதை அறிந்த சொக்கலிங்கக் கடவுள், *மதிமலி புரிசை' என்று ஒரு திருமுகப் பாசுரத்தை எழுதி, அவரிடம், 'சேரமான் பெருமாளிடம் இதைக் கொடுத்தால் பரிசில் வழங்குவான்” என்று குறிப்பித்தார். பாண பத்திரர் அப்படியே வஞ்சிமாநகரம் வந்து அத்திருமுகத்தைச் சேர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/34&oldid=585667" இலிருந்து மீள்விக்கப்பட்டது