பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுர் 29*

மன்னரிடம் அளித்தார். அதில், 'மதுரைப் பதியில் இருக் கும் ஆலவாயானகிய நான் சேரமானுக்கு எழுதுவதாவது: இது கொணர்பவன் உன்னைப் போல் என்னிடம் பேரன் புடையவன். இவனுக்கு வேண்டியதை அளித்து: அனுப்புக" என்ற செய்தி பாட்டாக இருந்தது.

அதைக் கண்டவுடன் சேரர் தம் தலைமேல் வைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினர். பாணரைப் பணிந்தார். "எம்பெருமான் திருமுகம் பெறும் பேறு எனக்குக் கிடைத் ததே" என்று களிடம் புரிந்தார். பிறகு அமைச்சர்களே அழைத்துத் தமக்குரிய செல்வங்கள் யாவற்றையும் ஒன்று விடாமல் துருவிக்கொண்டு வரச் செய்தார். பாணணுருக்கு. அவற்றைக் காட்டி, 'இவை யாவும் தங்களுடையனவே; இந்த அரசாட்சியும் தங்களுடையதே' என்று சொல்லி வைக்கவும், பாணர் அஞ்சி நடுங்கினர். தமக்கு வேண்டிய சிலவற்றை எடுத்துக்கொண்டு, "இறைவர் ஆணை; இந்த அரசை நீரே மேற்கொண்டு ஆட்சி புரிய வேண்டும்' என்று கூறினர். இறைவர் ஆணை யென்றதற்கு அஞ்சி, மீட்டும் அரசை ஏற்றுக் கொண்டு பாணபத்திரரை அன்போடும். உபசரித்து வழியனுப்பினர்.

சேரமான் பெருமாள் ஒவ்வொரு நாளும் சிவபெருமா னுக்கு அபிஷேகம் செய்து அருச்சித்துப் பூசை புரிவது வழக்கம். பூசை முடிந்தவுடன் கடராசப் பெருமானுடைய சிலம்பொலி கேட்கும். அதனேக் கேட்டு உருகி இன்புறு. հ)}ff iր ս

ஒருகாள் பூசை செய்து முடிந்தவுடன் வழக்கப்படி சிலம்பொவி கேட்கவில்லை. "நாம் செய்த பூசையில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது' என்று வருந்திய சேரர் உடைவாளே எடுத்துக் குத்திக் கொள்ளப் போனர். அப்போது சிலம் பொலி கேட்டது. உடனே, "எம்பெருமானே, இன்று இந்த ஒலி தாழ்த்ததற்கு என்ன காரணம்?" என்று கைந்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/35&oldid=585668" இலிருந்து மீள்விக்கப்பட்டது