பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாயன்மார் கதை

வினவினர். இறைவன் அசரீரியாக, "தில்லையில் சுந்தரன் வந்து திருப்பதிகம் பாடினன். அதைக் கேட்டுக்கொண் டிருந்தமையால் தாமதமாயிற்று” என்று கூறினன். சுந்தரரையும் சேரமானேயும் தோழர்களாக்க வேண்டும் என்ற திருவுள்ளத்தோடு இறைவன் இவ்வாறு குறிப்பிக் கவே, சேரமான் பெருமாள், 'அவ்வளவு சிறந்தவராகிய பெருமானே நான் தரிசிக்க வேண்டும்' என்று தில்லையை நோக்கிப் புறப்பட்டார். r

தில்லே சென்று நடராசப் பெருமான வணங்கிப் பொன் வண்ணத் தந்தாதி என்ற நூலைப் பாடினர். சுந்தரர் திருவா ரூரில் இருப்பதை உணர்ந்து அங்கே சென்று அவரை வணங்கி நட்புப் பூண்டார். இருவரும் உளங்கலந்த பெரு நண்பரானர்கள். அடியார்கள் அதுகண்டு இருவர் பண்பை யும் வியந்தார்கள். இருவரும் திருவாரூர்த் திருக்கோயில் சென்று இறைவனே வழிபட்டார்கள். சேரமான் பெருமாள் திருவாரூர் மும்மணிக் கோவை என்ற நூலைப் பாடியருளினர்.

அப்பால் சுந்தரமூர்த்தி நாயனரோடு பாண்டி காட்டி லும் சோழ காட்டிலும் உள்ள பல தலங்களைத் தரிசித்து இன்புற்ருர். காயைைரயும் அழைத்துக் கொண்டு திருவஞ் சைக் களத்துக்கு வந்து இறைவனே வழிபட்டார். நகர் முழுவதையும் அலங்கரிக்கச் செய்து, சுந்தரமூர்த்தி நாயனருக்குச் சிறந்த முறையில் வரவேற்பளித்துப் பேருட சர்ரம் செய்து சில நாட்கள் தம்முடன் இருக்கச் செய்தார்.

பிறகு சுந்தரர் விடைபெற்றுத் திருவாரூர் சென்ருர். பின்னும் ஒரு முறை அப் பெருமான் வஞ்சிமாநகரம் வந்தார். திருவஞ்சைக்களம் சென்று வழிபட்டபோது, இனி இவ்வுலக வாழ்க்கை போதும் என்ற எண்ணம் தோன்ற, அதனேக் குறிப்பாக இறைவனிடம் விண்ணப் பித்துக் கொண்டார். கைலாசபதி சிவகணங்களுடன் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/36&oldid=585669" இலிருந்து மீள்விக்கப்பட்டது