பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுர் 31

வெள்ளே யானையை அனுப்ப, அதன்மேல் ஏறிச் சுந்தார் கைலையை நோக்கிச் செல்லலானர்.

அரண்மனையில் இருந்த சேரமான் பெருமாள் இதைக் கேள்வியுற்று ஒரு குதிரையின் மீதேறி விரைவாகத் திருக் கோயிலை நோக்கிவந்தார். அதற்குள் சுந்தரர் யானைமீதேறிச் சென்றதை அறிந்து அக்குதிரையின் காதில் சிவமந்திரத்தை ஒதவே, அது வானில் செல்லத் தொடங்கியது. அதனைச் செலுத்திக் கொண்டு சேரர்பிரான் சுந்தரர் யானைக்கு முன்னே சென்ருர், திருக்கைலேயில் எம்பெருமான் திருக் கோயில் வாயிலில் தடைப்பட்டு கின்ருர்.

சுந்தரர் உள்ளே சென்று எம்பெருமான் அடிபணிய, பெருமான் அவரைத் தாயன்புடன் வரவேற்ருன். சுந்தார். 'வாயிலில் சேரமான் காத்திருக்கிருர்’ என்று விண்ணப் பிக்க, உடனே சிவபெருமான் அவரையும் அழைத்துவரப் பணித்தான்.

உட்சென்று இறைவன்முன் சேரமான் பணிக்தெழுந்த போது இறைவன், "காம் அழைக்காமல் இங்கே i என் வந்தாய்?" என்று கேட்டான்.

"அடியேன் சுந்தரமூர்த்தியார் திருவடியைப் பணிந்து அவர் யானைக்குமுன் சேவித்து வந்தேன். தேவரீருடைய கருணயில்ை இங்கே வரப்பெற்றேன்” என்று சொல்லிப் பணிந்தார். பின்பு, "மற்ருெரு விண்ணப்பமும் கேட்டருள வேண்டும். அடியேன் தேவரீர்மேல் உலா ஒன்று பாடி னேன். அதைச் திருச்செவி சாத்தியருள வேண்டும்” என்று கூற, இறைவன், சொல்லுக' என்ருன் சேரமான் அதனை அங்கே அரங்கேற்றினர். கேட்ட சிவபிரான் மகிழ்ந்து, "நீ சிவகணத்தோடு ஒருவனுகி இங்கே இருப்பாயாக!” என்று அருள் பாலித்தான்.

சேரமான் இயற்றிய உலா, திருக்கைலாய ஞான உலா என்றும் ஆதி உலா எள்றும் பேர் பெறும். அதனேக் கைலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/37&oldid=585670" இலிருந்து மீள்விக்கப்பட்டது