பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாயன்மார் கதை

யில் கேட்ட மகாசாஸ்தா அதைக் கொண்டுவந்து உலகத் தாருக்கு வெளிப்படுத்தினர்.

38. கணங்ாத நாயனர்

திருஞான சம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய் தருளிய சீகாழித் திருப்பதியில் அந்தணர் குலத்தில் தோன். றியவர் கணகாதர். கணகாதர் என்ற பெயரை அவருக்குத் தாய் தந்தையர் வைத்தார்கள். அது பிற்காலத்தில் அவர் வளர்ந்து பெரியவரான பிறகு பொருள் உடையதாயிற்று. மறையவர் கூட்டத்துக்குத் தலைவராக, அவர்களுக்கு கல் வழி காட்டியாக அவர் விளங்கினர்.

அவர் தம் மரபுக்கு ஏற்ற ஒழுக்கத்திற் சிறந்து கின்ருர். சீகாழியில் எழுந்தருளியிருக்கும் தோணியப்பர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுப் பல வகையான தொண்டுகளைச் செய்து வந்தார். திருக்கோயில், நந்தன வனம், தீர்த்தம் ஆகியவற்றைச் செப்பஞ் செய்தும் பாது காத்தும் சிறப்பாக விளங்கச் செய்தும் வருவதையே தம் வாழ்நாட் பணியாகக் கொண்டார்.

இவ்வாறு செய்து வந்தவர் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களே அவரவர்க்கு ஏற்ற தொண்டு செய் யும் வழியில் பயிற்சி தந்து கிறுத்தினர். நந்தவனப் பணி செய்பவர்களுக்கு, எவ்வாறு செடிகொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். மலரைக் கொய் யும் முறையைச் சிலருக்குக் கற்பித்தார். வேறு சிலருக்கு அம் மலர்களே மாலையாகக் கட்டும் கலேயைப் பயிற்றினர். திரு மஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் திரு வலகிடுபவர், மெழுகுபவர், திருவிளக்கு எரிப்பவர், திரு முறைகளை எழுதுபவர், அவற்றை ஒதுவார் ஆகிய பல வகைத் தொண்டர்களுக்கும் என்ன என்ன ஆக வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/38&oldid=585671" இலிருந்து மீள்விக்கப்பட்டது