பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றுவ நாயனுர் 33

டுமோ அவற்றைக் கவனித்துச் செய்ய ஊக்கம் உண்டாக் கினர். இதல்ை அவரைச் சுற்றி எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருந்து வந்தது. அந்தக் கணத்துக்கு நடுவில் தலைவராக, காதராக, கனகாத நாயனர் விளங்கினர். இல்லறத்தில் வழுவாது கின்று, சிவத் தொண்டில் ஊற்றம் பெற்றுத் தொண்டு புரிபவர் களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் காயனர்.

திருஞான சம்பந்தரிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் திருவடியைத் தொழுது மூன்று போதும் அருச்சனை செய்து வந்தார். தொண்டருக்குத் தொண்டராகியும், தொண்டருக்கு காதராகியும், ஞான சம்பந்தர் பக்தராகியும் வாழ்ந்த இப்பெருமான் சிவபெரு மான் திருவருளால் திருக்கயிலையை அடைந்து கணகாதரா கும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.

39, கூற்றுவ நாயனர்

அசிச குலத்தில் பிறந்த அவருடைய இயற் பெயர் இன்னதென்று தெரியவில்லை. பகைவர்களுக்குக் கூற்று வனப் போலத் தோன்றி மிடுக்குடன் போர் செய்து வென்றமையால் அவருக்குக் கூற்றுவர் என்ற பெயரே வழங்கலாயிற்று. சிவபெருமான் பால் ஆழ்ந்த அன்புடைய அவர் கூற்றுவ நாயனர் ஆனர்.

களங்தை என்னும் ஊரில் இருந்த அந்த மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வென்ருர். அந்த வெற்றி மிடுக்கால் அவர் இறைவனே மறக்கவில்லை. எல்லாம் அவன் திருவருள் என்று வாழும் திறம் உள்ளவர் ஆதலின், அவனுடைய திருநாமத்தை எப்போதும் ஒதிக்கொண்டே இருப்பார். சிவனடியார்களேக் கண்டால் வழிபட்டு ஆவன

க. க-8 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/39&oldid=585672" இலிருந்து மீள்விக்கப்பட்டது