பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாயன்மார் கதை

செய்வார். பல வகையான சிவத் தொண்டுகளிலும் ஈடு பட்டு இன்பம் கண்டார்.

இறைவனுடைய அருள் வலிமை இருந்தமையால் அவ ருக்கு எல்லா வலிமைகளும் சேர்ந்தன. படை வலிமை சிறப்பாக அமைந்தது. அயலில் உள்ள காடுகளை யெல் லாம் வென்று தம்முடைய ஆணையின் வழியே நடை பெறும்படி செய்தார். அவருக்கு எல்லேயற்ற பொருள் வளம் அமைந்தது. தேர், களிறு, பரி, காலாள் என்னும் கால்வகைப் படைகளும் கிறைந்திருந்தன. வீரச் செருக் கும் வெற்றித் திருவும் மிக்கவராகி அவர் விளங்கினர்.

இவ்வாறு பல மன்னர்களையும் எதிர்த்துப் போர் செய்து அவர் காட்டைக் கைப்பற்றி விரிந்த நாட்டுக்கு உரிய அரசராகப் பெற்றும், முடி அணியும் சிறப்பை அவர் பெறவில்லை. அவர் இயல்பிலே குறுகில மன்னரில் ஒருவராக இருந்தவர். தமிழ்நாட்டிலே குறுகில மன்னர்கள் பலர் இருந்து வந்தார்கள். சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவரே திருமுடி அணியும் உரிமை பெற்ற வர்கள்; அதனால் அவர்களே முடியுடை மன்னர் என்று வழங்குவது மரபு.

சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று பெரு மன் னர்களும் வலி இழந்திருந்த அக்காலத்தில், கூற்றுவ மன்னர் தம்முடைய திறமையால் அவர் நாடுகளைக் கைப்பற்றினர். அப்படிப் பெற்றும் முடியுடை மன்னர் ஆக அவரால் முடியவில்லை.

தாமே சூட்டிக்கொள்வது அன்று முடி. வேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்குத் திருமுடியைச் சூட்டுவார்கள். தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/40&oldid=585673" இலிருந்து மீள்விக்கப்பட்டது