பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றுவ நாயனுர் 35

சிவபக்தியிற் சிறந்திருந்த கூற்றுவ நாயனர் இறைவ லுடைய திருக்கோயில்களில் சிறந்த தில்லேயில் முடிசூட் டிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். முடிபுனேவதற்கு ஏற்ற இலக்கணங்கள் யாவும் அவரிடம் இருந்தும், சோழர் குலத்தில் பிறக்கவில்லை என்ற குறை ஒன்று இருந்தது. இருப்பினும், இப்போது நாட்டின் ஆட்சி முறை நம் கையில் இருப்பதல்ை நாமே முடி புனைந்து அரசாள்வது முறை என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. தில்லைவாழ் அந்தணர்களே அணுகிப் பணிந்து, தமக்குப் பொன்முடி சூட்ட வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

மரபு தவிராத தில்லைவாழ் அந்தணர்கள் அதற்கு உடம்படவில்லை. சோழர்கள் பரம்பரை பரம்பரையாக அணிந்து வந்த திருமுடி அவர்களுடைய பாதுகாப்பில் இருந்தது. அதையே தாம் சூட்டிக்கொள்ள வேண்டு மென்று கூற்றுவர் விரும்பினர். அவர்கள் மறுத்து விட் டார்கள். சோழ குலத்திலே பிறந்த அரசர்களுக்கன்றி வேறு யாருக்கும் இந்த முடியைச் சூட்ட மாட்டோம்" என்று சொல்லி விட்டார்கள்.

முடி சூடினலும் குடாவிட்டாலும் கூற்றுவரே அர சாட்சி செய்து வந்தார். அரசருடைய விருப்பத்தின்படி கடக்காவிட்டால் அவரால் தமக்குத் திங்கு வருமென்று அஞ்சினர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். ஆகவே தம்முள் ஒரு குடும்பத்தை மாத்திரம் தில்லையில் எழுந்தருளியிருக் கும் அம்பலவாணருக்குப் பூசை புரியவும், திருமுடியைக் காவல் புரியவும் வைத்துவிட்டு யாவரும் சேர காட்டுக்குப் போய் விட்டார்கள். அங்கிருந்தபடியே, நடராசப் பெரு மானுக்குப் பூசை புரியாமல் இருக்கும்படி கேர்ந்த தம் கிலையை எண்ணி வாடினர்கள்: ஆடும் பெருமானே மனத் தால் வழிபட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/41&oldid=585674" இலிருந்து மீள்விக்கப்பட்டது