பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் அடிமை இல்லாத புலவர் . 37 40. பொய் அடிமை இல்லாத புலவர்

புராணத்தில் தனி அடியார்களாகக் காட்சி அளிப்பவர்கள் அறுபத்து மூன்று பேர். அவர்களோடு தொகையடியார்களாக வருபவர்கள் ஒன்பது வகையினர். இன்ன காலத்தில் இன்ன இடத்தில் வாழ்ந்தார் என்று சுட்டிக் காட்டும் வாழ்க்கையை யுடையவர்கள், தனி அடியார்கள். தொகையடியார்கள் என்பவர்கள் ஒவ்வோர் இயல்புபற்றி ஒன்ருக இருந்து பழகும் கூட்டத்தார்கள். அவர்கள் இன்ன காலத்தில் இருந்தவர்கள் என்று குறிப் பிட்டுச் சொல்ல இயலாது. முன்பும் இருந்திருப்பார்கள்; பின்பும் இருப்பார்கள்.

அவர்களில் முன்பு தில்லை வாழ் அந்தணர்கள் என்ற வகையினரைப் பார்த்தோம். திருத்தொண்டத் தொகை யின் தொடக்கத்தில் வருகிறவர்கள் அவர்கள். அவர்களைப் போலவே பொய்யடிமை இல்லாத புலவர் என்னும் கூட்டத்தினரும் தொகை யடியார்களே.

திருத்தொண்டத் தொகையில் ஏழாம் பாசுரத்தில் சுந்தரமூர்த்தி நாயனர், 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்று பாடினர். அதற்கு வகை நூல் பாடிய கம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி யில், கடைச் சங்கப் புலவர்களாகிய காற்பத்தொன்பது பேரையுமே பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்று பாராட்டினர். -

" தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச்

சங்கம் அதிற்கபிலர் பரணர்தக் கீரர் முதல் நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள் நமக் கீயும் திருவால

வாய் அரன் சேவடிக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/43&oldid=585677" இலிருந்து மீள்விக்கப்பட்டது