பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 s நாயன்மார் கதை

பொருள் அமைத் தின்பக் கவியல

பாடும் புலவர்களே”

என்பது அவர் பாட்டு. உமாபதிசிவம் அருளிய திருத் தொண்டர் புராண சாரம் என்னும் நூலும், கபிலர் பரணர் முதலிய சங்கப் புலவர்களேயே பொய்யடிமை யில்லாத புலவர் என்று சொல்கிறது.

சங்க காலத்துப் புலவர்கள் யாவரும் சிவபிரான் திருவடிக்கே ஆளாகி வாழ்ந்தவர் என்று திட்டமாகச் சொல்ல இயலாது. பொதுவாக யாவரும் கடவுளன்பு உடையவர்களாக இருந்திருக்கலாம். ஆயினும், மக்களைப் புகழ்ந்து அவர்களுடைய ஈகைக்காக ஏங்கி கின்றவர்கள் பலர். அவர்களைப் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சொல்லுவது பொருந்தாது.

இதனை உணர்ந்த சேக்கிழார், உலகில் புலமை யுடையவர்கள் இரு வேறு வகையினராக இருப்பதைத் தெரிவித்தார். தம்முடைய புலமைத் திறத்தால் பலர் உள்ளத்தைக் கவர்ந்து மக்களைப் பாடி அவர்களிடமிருந்து பரிசு பெற்று வாழ்பவர் பலர். தமக்கு வந்த புலமை இறைவன் அருளால் வந்ததென்று தெளிந்து, அவனுக்கு ஆளாதலே மனிதப் பிறவிக்கும் அதில் கிடைத்த அறிவுக் கும் பயன் என்று கண்டு, மெய்யான பெருமானுக்கு மெய்யான அடிமையாகி, பொய்யான மக்களுக்குப் பொய்யான அடிமை யாகாமல் இருக்கும் புலவர் சிலர். அத்தகைய மெய்யடிமை செய்யும் புலவர்களேயே உள்ளங் கொண்டு சுந்தரர் "பொய்யடிமை இல்லாத புலவர்” என்று சொல்லி யிருக்க வேண்டும்.

திருப்புகலூர்ப் பதிகத்தில் சுந்தரர் பொய்யடிமை, உள்ள புலவருக்கு அறிவுரை கூறி யிருக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/44&oldid=585678" இலிருந்து மீள்விக்கப்பட்டது