பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ச்சோழ நாயனுர் 41

சென்று தம் சுற்றத்துடன் தங்கலானர். அத்திருத்தலத் தில் உள்ள திருக்கோயிலுக்கு ஆனிலே என்று பெயர். அக்கோயிலுக்குச் சென்று இறைவனே வணங்கித்தமக்குரிய திருமாளிகைக்குச் சென்ருர். மேற்புறத்துள்ள அரசர்கள் வந்து மன்னரைக் கண்டு பணிந்து தம் திறைகளே அளித்துச் சென்ருர்கள்.

அப்போது புகழ்ச்சோழர், "இந்தப் பக்கத்திலுள்ள மன்னர் யாவரும் திறைகொண்டு வந்து கொடுத்து விட் டார்களா? யாரேனும் எஞ்சியிருந்தால் சொல்லுங்கள்' என்று தம் அமைச்சரிடம் சொன்னர்.

அதுகேட்ட அமைச்சர்கள், "யாவரும் திறைசெலுத்தி விட்டார்கள்; ஒருவன் மட்டும் இன்னும் திறை கொணரா மல் தாமதம் செய்கின்ருன்' என்ருர்கள்.

"யார் அவன்' என்று சோழமன்னர் கேட்டார். "இங்கே அருகில் மலையாணத்துக்குள் இருக்கும் அதி கன் என்பவன் இன்னும் திறைகொடுக்கவில்லை.'

"அப்படியா? அவன் எத்தகைய அரணத்தில் இருங் தால்தான் என்ன? உங்களுக்கு அது ஒரு பொருளோ? நீங்கள் படைகளுடன் சென்று அவன் அரணத்தை அழித்து வாருங்கள்' என்று மன்னர் கட்டளையிட்டார்.

அரசருடைய ஆணைப்படியே பெரிய படை அதிக னுடைய அரனே நோக்கிச் சென்றது.

அதிகமானுடைய படையும் சோழர் படையும் ஒன்றை ஒன்று எதிர்த்தன. பெரும்போர் மூண்டது. போர் மிகவும் கடுமையாக கிகழ்ந்தது. அதிகமானுடைய படை முழு ஆற்றலுடன் போர்செய்யும்; ஆயினும் சோழ அரசருடைய படைக்குமுன் அப்படை கிற்க இயலவில்லே. யானைகள் வீழ்ந்தன: குதிரைகள் குலேந்தன; போர்வீரர் பலர் மாண் டனர். அதிகமான் படை இவ்வாறு சிதைந்து குலைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/47&oldid=585681" இலிருந்து மீள்விக்கப்பட்டது