பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாயன்மார் கதை

அழியவே அவன் தன் கோட்டையை விட்டுவிட்டு எங்கோ ஒடிப்போன்ை.

போர்க்களத்தில் பகைவர் விட்ட பொருள்களையும் அந்த அரணில் இருந்த பொன் முதலியவற்றையும் படை வீரர்கள் கைப்பற்றிக் கருவூருக்குக் கொண்டு வந்தார்கள். பட்ட பல படைத்தலைவர்களுடைய தலைகளேயும் வீரர் களின் தலைகளையும் சோழமன்னர் பார்த்துக் களிக்கட்டும் என்று எண்ணிக் குவையாகக் கொண்டுவந்து கருவூரில் குவித்தார்கள்,

புகழ்ச்சோழர் அதிகன் அரண் விட்டு ஒடியதைக் கேட்டு மகிழ்ந்தார். பகைப்படையினர் தலைக்குவையைப் பார்ப்பதற்கு வந்தார். வந்து பார்த்தார். அந்தத் தகலக் குவியலின் நடுவில் ஒருதலை அவர் பார்வையை இழுத்தது. அதை உற்றுக் கவனித்தார். "என்ன இது?’ என்று திடுக்கிட்டு நடுங்கினர்.

அவர் பார்த்த அந்தத் தலையில் ஒரு சிறிய சடை இருந்தது. அவர் மனம் நடுங்கிக் கலங்கியது: அதைக் கண்டு கைதொழுதார். என்ன திங்கு நேர்ந்ததோ என்று அஞ்சினர். அந்தத் தலையைக் கொண்டுவரச் சொல்லிப் பார்த்தார். இப்போது அதில் கன்ருகச் சடை தெரிந்தது. அவர் கண்கள் நீரைக் கக்கின.

"கான் பெரிய படையைப் போக்கி இந்த உலகில் சைவ நெறியைப் பாதுகாத்து அரசாட்சி செய்யும் முறை மெத்த அழகாயிருக்கிறது' என்று சொல்வி அயர்ந்தார். "இந்தத் திருமுடியிலே சடைதாங்கும் இவர் சடாதாரி யாகிய இறைவனுடைய அடியாராகத்தான் இருக்க வேண்டும். இத்தகையவருடைய தலையைக் கொண்டுவர, கான் என் கண்னலே பார்த்தும் இன்னும் இந்த உல கத்தை ஆள்வேன் என்று இருப்பேன? பார் தாங்காமல் பழியல்லவா தாங்கவேண்டி யிருக்கும்? எள் ஆட்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/48&oldid=585682" இலிருந்து மீள்விக்கப்பட்டது