பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ச்சோழ நாயனுர் 43

சிவனடியாரைக் கொலைசெய்த பாவமன்ருே வந்து குழ்ந்து விட்டது?” என்று புலம்பினர்.

"இனிமேல் அரசாட்சி செய்யும் தகுதியை நான் இழந்துவிட்டேன்; இனி இறைவனுடைய தொண்டு கெறி யில் கின்று வழுவின்றி நாட்டைப் புரக்கும்படி என் மகனுக்கு முடிசூட்டுங்கள்' என்று அமைச்சர்களே கோக்கிக் கூறினர்.

இதைக்கேட்ட அமைச்சர்கள் கலங்கினர்கள்; என் செய்வதென்று தெரியாமல் மயங்கினர்கள். அவர்களுக் குரிய சமாதானத்தைச் சொல்லிய சோழர், "இனி நான் உலகில் வாழ்வது முறையன்று, தீயிற் குளித்து உயிர் விடுவதே தக்கது. இறைவனுக்குச் செய்யும் அபராதத்தை விட அடியவர்களுக்குச் செய்யும் அபராதத்துக்கு வேறு போக்கில்லை' என்று சொல்லித் தீயை வளர்க்கச் செய் தார். திருநீற்றை மெய்ம் முழுவதும் பூசிக்கொண்டு சடையுள்ள தலையை ஒரு பொன் தட்டில் வைத்துத் தம் தலையில் தாங்கிக்கொண்டு அந்த எரியை வலம் வந்தார். சிவபிரானுடைய பஞ்சாட்சர மந்திரத்தைச் செபித்துக் கொண்டே அந்தத் தீப்பிழம்புக்குள்ளே இறங்கிவிட்டார்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்; அங்கிருந்தவர்கள் கண்மாரி பொழிந்தனர்; சிவபெருமான் புகழ்ச்சோழரைத் தம்முடைய திருவடி வீழலில் இருக்கச்செய்து பேரின்பப் பெருவாழ்வாழ்வை அருளினன்.

இந்தப் புகழ்ச்சோழரே, எறிபத்த காயனர் தம் பட்டத்து யானையை வெட்டி கின்றபோது, "இந்த அபராதத்துக்கு இது போதாதென்ருல் என் தலையையும் கொய்தருள வேண்டும்' என்று தம் வாளே உருவி நீட்டியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/49&oldid=585683" இலிருந்து மீள்விக்கப்பட்டது