பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நாயன்மார் கதை

42. நரசிங்க முனையரைய நாயனர்

கடுகாட்டின் ஒரு பகுதிக்குத் திருமுனைப்பாடி நாடு என்று பெயர். சுந்தரமூர்த்தி நாயனர் திருவவதாரம் செய்த திருநாவலூர் அந்த காட்டில் உள்ளது. அந்தத் திருமுனைப்பாடி காட்டை நரசிங்க முனையரையர் என்ற அரசர் ஆண்டுவந்தார். $

பாரியின் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரையும் திருக்கோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற மன்னன் மணம்செய்து கொண்டான் என்றும், அந்தத் திருமணத்தை ஒளவையார் முன் இருந்து நடத்திவைத்தா ரென்றும் ஒரு வரலாறு வழங்குகிறது. அந்தத் தெய்வீக னுடைய மரபில் வந்தவர் நரசிங்க முனையரையர் என்று ஒரு புராணம் சொல்கிறது.

நரசிங்கமுனையரையர் சிறந்த சிவபக்தர். தம்முடைய காட்டிலுள்ள சிவாலயங்களில் வழிபாடுகள் குறைவின்றி நடைபெறும்படி பேணிவந்தார். அக்காலத்தில் திரு காவலூரில் ஆரூரர் என்னும் திருகாமத்தோடு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவவதாரம் செய்து வளர்ந்துவந்தார். திரு காவலூருக்கு சரசிங்க முனையரையர் சென்றிருந்தபோது அப்பெருமானின் உருவப் பொலிவையும் பேரறிவையும் தெரிந்து அவரை அழைத்துவந்து வளர்த்து வந்தார். இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபின்பு பல தலங்களுக்குச் சென்று அப்பெருமான் திருவாரூரையே தம் இருப்பிடமாகக் கொண்டார்.

நரசிங்க முனையரையர் வீரத்தில் சிறந்தவர். Lಖ போர்களில் வெற்றிபெற்றவர். இறைவனுடைய அடி யார்களே வணங்கித் தொண்டு புரிவதே பெரும்பேறு எனக் கருதி ஒழுகிவந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/50&oldid=585684" இலிருந்து மீள்விக்கப்பட்டது