பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரசிங்க முனையரைய நாயனுர் 45

திருவாதிரை நட்சத்திரத்தன்று இறைவனுக்குச் சிறப்பான பூசை முதலியன புரிவித்து வழிபடுவார். அப்போது வருகிற சிவனடியார்களுக்கெல்லாம் அறுசுவை உண்டியும் ஆடையும் வழங்குவார். அவற்றுடன் அவர் களுக்கு நூறு பொன்னுக்குக் குறையாமல் அளிப்பார். இவ்வாறு நீறணியும் தொண்டர்களுக்கு வேண்டிய வழிபாடு செய்து பொருள் வழங்கியமையால் வரவர அடியார்களின் கூட்டம் மிகுதியாயிற்று.

இப்படித் திருவாதிரைத் திருகாளில் அடியார் வழி பாடு நிகழ்ந்து வருகையில், ஒருமுறை வந்திருந்த அடியவர் களில் ஒருவர் காமக்குறிப்புத் தோற்றும் உருவம் உடைய வராய் இருந்தார். அவருடைய நெற்றியில் திருநீறு இருந்தது. ஆயினும் அவருடைய அலங்காரங்களும் பார் வையும் காமக்குறிப்பை வெளிப்படுத்துவனவாக இருந் தன. அவற்றைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அவரிடம் அவமதிப்புடையவராகி ஒதுங்கிச் சென்ருர்கள். அந்தக் கூட்டத்தில் அவர்மட்டும் தனியே கின்ருர்.

இதை நரசிங்கமுனேயரையர் கண்டார். எத்தகைய ஒழுக்கம் உடையவரானலும் திருநீறு அணிந்திருந்தால் அவரை இகழக்கூடாது என்ற கொள்கை உடையவர் மன்னர். ஆதலின் அந்த அடியாரை அணுகி வணங்கி அவருக்கு யாவருக்கும் கொடுப்பதைப்போல் இரண்டு பங்கு பொன்கொடுத்து வழிபட்டார். -

இறைவனுடைய போருளே கினேயச்செய்யும் திருற்ே றுக்கு உரிய மதிப்பை மறந்து மற்றவற்றில் மனம் போக் கில்ை, வந்தவருடைய சீலம் முதலியவற்றில் ஆராய்ச்சி தலைப்படும். பொன் அழுக்கான இடத்தில் கிடந்தாலும் பொன்னைப் பெரிதாக மதிப்பவன் அதை வெறுக்காமல் கைக்கொள்வான். அதுபோலத் திருநீறு அணிதலே இடு. பெரிய செயல் என்று எண்ணிய நரசிங்கமுனேயரையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/51&oldid=585685" இலிருந்து மீள்விக்கப்பட்டது