பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாயன்மார் கதை

அதனை அணிந்தவரைக் கண்டு, பிறவற்றைக் காணுது, இவரும் சிவனுக்கு அடியார் என்று வணங்கியது அவ ருடைய திண்ணிய நெஞ்சத்தைக் காட்டுகிறது.

43. அதிபத்த நாயனுர்

கடற்கரையை அடுத்த நகரங்களைப் பட்டினம் என் பது தமிழ் வழக்கு சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த பெருநகரமாக விளங்கியது. அதற்கு அடுத்த சிறப்புடையது நாகப்பட்டினம். கப்பல் வாணிகம் செய் யும் பல பெரு மக்கள் வாழும் செல்வம் மிக்க நகரம் அது: வேற்று நாட்டுப் பொருள்கள் கலங்களிலிருந்து இறங்க, உள்நாட்டுப் பொருள்கள் அவற்றில் ஏற, எப்போதும் இடைவிடாத ஆரவாரம் உடையதாக இருப்பது; குதிரை களும் யானைகளும் ஆடை அணிகளும் வந்து இறங்கும் துறைமுகத்தை உடையது.

அங்ககளின் ஒருசார் நெய்தல் கில மக்களாகிய வலைஞர் வாழும் பகுதி ஒன்று உண்டு. கடலில் வலே வீசி மீன் களைப் பிடித்து விற்று வாழும் மக்கள் அங்கே இருந்தனர். வலையிலுள்ள கயிறு களைப் பிடித்து இழுப்பவர்களின் ஒலி யும், மீன் விலை பகர்பவர்களின் ஆரவாரமும், சங்குகளைக் குவிப்பவரின் முழக்கமும் கடலொலிபோலப் பொங்கும் இடம் அது.

அத்தகைய நுளேயர் பாடியில் வாழும் வலைஞர்களுக் குத் தலைவராக அதிபத்தர் என்பவர் இருந்தார். அவர் சிவபெருமானிடம் நிறைந்த அன்புடைய அடியவர். அங்கே வாழும் வலைஞர்கள் கடலில் படகை இயக்கிச் சென்று மீன்களைக் கொணர்ந்து குவிப்பார்கள். அவற்றைத் தம் முடைய வருவாயாகப் பெற்று மீன் வாணிகம் செய்து செல்வராக ஓங்கி சின்ருர் அதிபத்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/52&oldid=585686" இலிருந்து மீள்விக்கப்பட்டது