பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாயன்மார் கதை

உணவின்றி அவர் உடம்பு வாடியது. ஆயினும் கொள்கை மங்கவில்லை. இறைவன் தன் சோதனையைப் பின்னும் கடுமை ஆக்கினன். ஒருநாள் அவருடைய வலையில் மிகவும் பளபளப்பான மீன் ஒன்று படும்படி செய்தான். உடம்பெல்லாம் பொன்னல் அமைந்து, அங்கங்கே நவமணி களைச் செதில்களாகவும் கண்ணுகவும் கொண்ட மீன் அது. அதன் விலே அளவிடுதற்கரியது. அதனைப் பிடித்த வலைஞர்கள் மிக்க வியப்படைந்து, 'இதோ ஒரு மீனப் பிடித்து விட்டோம்' என்ருர்கள். சிவபெருமானுடைய அடித் தொண்டிராகிய அதிபத்தர் அதைப் பார்த்தார். பொன்னும் நவமணியும் இணைந்து பொருந்திய மீன் என் பதை உணர்ந்தார். ஆயினும் அதனே எடுத்துக் கொண்டு பயன் அடையும் எண்ணம் அவருக்கு உண்டாகவில்லே. 'இந்த மீன் வழக்கம்போல எம்பெருமானுக்குரியது. ஆத லின் கடலிலே விட்டுவிடுக” என்று சொல்லி விடச் செய்தார்.

பொருளில் ஆசை இல்லாதவர்கள் உலகத்தில் மிக அரியர். மனேவி மக்களுடன் வாழ்ந்து தமக்கென ஒரு தொழிலை மேற்கொண்டு வாழ்கிறவர்களுக்குப் பொருள் இன்றியமையாதது. ஆதலின் அவர்கள் ஆர்வத்தோடு பொருளே ஈட்டுவார்கள். இப்படி இருக்க, வறுமை வந்து நலிந்த போதும், பசியிலும் இறக்கும் துன்பத்திலும் தாம் கொண்ட கொள்கையை விடுவது பெரும் துன்பம் என்று அதிபத்தர் எண்ணினர். அந்த ஒருநாள் தம் கொள்கையை விட்டு விட்டுக் கிடைத்த மீனே விற்றிருந்தால் பொற்குவை யையே பெற்றிருக்கலாம். அவர் அதை வினைக்கவில்லை. இறைவனுக்கு உரியதாகச் செய்யும் முதல் மீன் அதுவாத லின், அது சிறிதாயினும் பெரிதாயினும், விலை சிறந்த தாயினும் தாழ்ந்ததாயினும் அவனுக்கே உரியதென்று உறுதியாக எண்ணி விட்டு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/54&oldid=585688" இலிருந்து மீள்விக்கப்பட்டது