பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிக்கம்ப நாயனுர் 49

அன்பினுல் மேற்கொண்ட விரதத்தைப் பொருளாசை யால் விட்டு மயங்காமல் கடைப்பிடித்த அன்பருடைய பெருமையை உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டான் இறைவன். பொன்னும் மணி யும் உறுப்பாகப் பெற்ற அந்த மீனே மீண்டும் கடலிலே அதிபத்தர் விடச் செய்த அந்தக் கணத்தில், சிவபெருமான் விடையின்மேல் அருளுருவாகிய அம்மையுடன் எழுக் தருளிக் காட்சி கொடுத்தருளின்ை. இறைவனே வணங்கி இன்ப வாரிதியிற் குளித்த அதிபத்தர் என்றும் மாருத இன்ப வாழ்வைப் பெற்ருர்.

44. கலிக்கம்ப நாயனர்

இடுகாட்டில் பெண்ணுகடம் என்னும் திருத்தலம் ஒன்று இருக்கிறது. திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் வந்து தரிசித்துப் பாமாலை சூட்டிய திருப்பதி அது. அங்குள்ள திருக்கோயிலுக்குத் தூங்கானே மாடம் என்ற பெயர் வழங்கும்.

அங்கே வணிகர் குலத்தில் கலிக்கம்பர் என்ற அடியார் ஒருவர் இருந்தார். இறிைவனிடத்தில் மாருத பேரன்பு டைய அவர், ஒவ்வொரு நாளும் திருத்தாங்கானே மாடம் சென்று வழிபட்டுத் தொண்டு புரிவார். தமக்குரிய பெரும் பற்ருக இறைவனேயே பற்றிக் கொண்டு வாழும் பெருங்தகைமை உடையவர் அவர். சிவனடியார்களே வரவேற்று உபசரித்து அறுசுவை உண்டியளித்து, அவர் களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் வழங்கி வந்தார். இவ்வாறு ஒழுகிவரும் நாளில் ஒருநாள் அவர் தம் மனே யில் அமுது செய்யும்பொருட்டு வந்திருந்த சிவனடியார்கள வரவேற்று, அவர்களுக்கு அமுதுபடைப்பதற்குமுன் அவர்

தா.க-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/55&oldid=585689" இலிருந்து மீள்விக்கப்பட்டது