பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாயன்மார் கதை

களுடைய திருவடிகளை வழக்கம்போல விளக்க முற் பட்டார்.

அவருடைய மனேவியார் வீட்டையெல்லாம் நன்முகச் சுத்தம் செய்து அடியார்களுக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகளை யெல்லாம் செவ்வனே சமைத்தார். பின்பு அடியார்களின் திருவடியை விளக்கும்பொருட்டுச் செம்பில் நீரெடுத்துவிட, கலிக்கம்பர் அவர்கள் திருவடியை விளக் கினர். இப்படியே ஒவ்வொருவராக வந்திருக்கும் அடியார் அனைவருடைய திருவடிகளையும் விளக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

அடியார்களுள் ஒருவர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். அவர் முகத்தைக் கலிக்கம்பருடைய மனேவியார் பார்த் தார். அவருக்குச் சிறிதே அருவருப்புணர்ச்சி உண்டா யிற்று. அந்த அடியார் அந்த வீட்டில் முன்பு சில காலம் வேலைக்காரராக இருந்தவர். பின்பு வேலை செய்வதை விட்டுப் போய்ச் சிவனடியாராகிவிட்டார். இவர் நம் வீட்டில் பணியாளாக இருந்தவர் அல்லவா? என்ற நினைவி ல்ை சற்றே தயங்கி வின்ருர், அந்தப் பெண்மணியார்.

அந்த அடியாருடைய காலப் பற்றி விளக்கும் பொருட்டு கின்ருர் கலிக்கம்பர். அவர் மனைவியாரோ செம்பிலிருந்து ைேர வார்க்காமல் சிறிது பாணித்தார். இத ஆனக் கண்ட வணிகர் பெருமானுக்குத் தம் மனைவியா ருடைய கினேவு புலயிைற்று. இவர் சிவவேடப் பொலி வுடன் சிவனடியாராக இப்போது எழுந்தருளி யிருக்கும் நிஐலயை மறந்து, பழைய காலத்துக் கதையை எண்ணிக் கொண்டு தயங்குகிருள் என்று எண்ணினவுடனே, மேலே ஒன்றும் யோசிக்கவில்லை; ஒரு வாளை உருவி அந்தப் பெண் மணியார் கையிலிருந்த செம்பை வாங்கிக்கொண்டு அந்தக் கையை வெட்டி விட்டுத் தாமே செம்பின் நீரை விட்டு அடியார் தாளே விளக்கலானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/56&oldid=585690" இலிருந்து மீள்விக்கப்பட்டது