பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நாயன்மார் கதை

எதுவும் அதற்கு நிகராகத் தோன்றவில்லை. இறைவன் திருக்கோயிலில் விளக்கு எரியாமல் கின்ருல் அவர் உயிரும் உடலில் இராமல் கின்றுவிட வேண்டும். அந்த விளக்குக்கு எண்ணெயையா அவர் விட்டு எரித்தார்? தம் செல்வ முழு வதையும் கொண்டு எரித்தார்; தம் வீட்டைக் கொண்டு எரித்தார்; தம் மதிப்பை விட்டு எரித்தார். இப்போது காணத்தை விட்டு எரிக்க முன் வந்தார்.

கலியனர் தம் மனைவியாரை விலே கூறினர். வாங்கு பவரைக் காணவில்லே. கன்ருக வாழ்ந்த அவரிடம் இன்னும் மக்களுக்கு மதிப்பு இருந்து வந்தது.

பிறர் செய்யத் துணியாத ஒன்றைச் செய்ய முன் வந்த கலிய நாயனர் எண்ணம் ஈடேறவில்லை. மனேவியை விற்றுப் பொருள் கொள்ள முடியவில்லை. ஒன்றும் வகை தெரியாமல் இறைவன் சங்கிதிக்குள் வாட்டத்தோடு நின்ருர்.

‘விளக்கு உதிரத்தால் எரிவதானல் நம் உதிரத்தையே எண்ணெயாக வார்க்கலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அகலே வைத்துத் திரியை இட்டு அதில் இரத்தத்தை விட எண்ணி, கையில் வாளே எடுத்துத் தம் கழுத்தை அரியத் தொடங்கினர். அப்போது அருட்கட லாகிய இறைவன் தோன்றி அவர் கையைப் பிடித்து நிறுத்தின்ை. -

பிறகு எம்பெருமான் நாயனருக்குச் சீரும் சிறப்பு முடைய பெருவாழ்வு அளித்து இறுதியில் பேரின்ப வாழ்வும் கொடுத்தருளினன்.

போரில் புகுந்து சமர் செய்யும் வீரர்கள் தம் உயிரை மதிப்பதில்லை. அவர்கள் மன்னர்களின் ஏவலர்களாகி ஊதியம் பெற்று வாழ்பவர்கள். பகை மன்னரோடு போர் புரிவது தக்க காரணங் கொண்டா என்று அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/60&oldid=585694" இலிருந்து மீள்விக்கப்பட்டது