பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி நாயனுர் 55

ஆராய்வதில்லை. போரின் முடிவில் வெற்றி உண்டானல், கிடைக்கும் காட்டில் அவர்களுக்குப் பங்கு கிடைக்கப் போவதில்லை; ஏதோ பரிசு கிடைக்கலாம். மாதச் சம்பளங் தான் நிச்சயமாகக் கிடைக்கும். இந்தக் கூலிக்காகத் தம் உயிரை விடவும் துணிந்து போரிடுகிருர்கள் வீரர்கள். அது மனித மன இயல்புக்கு ஒத்த செயலாக இருப்பதைக் காண்கிருேம்; இன்னும் இந்த கிலே இருந்து வருகிறது.

தம்முடைய வாழ்க்கைக்குப் பயன் இது என்று உறுதி யாக நம்பி ஒரு தொண்டைச் செய்து வருபவர்கள், அதன் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கத் துணிவது இயல் புக்கு மாறுபாடு அன்று. போர் வீரன் தான் பெறும் கூலிக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன் வருவது இயல் பால்ை, இது ஆயிரம் மடங்கு அதைவிட இயல்பாகும். அதல்ைதான் காயனர் தாம் மேற்கொண்ட பணிக்கு இடையூறு வந்தபொழுது தமக்கு உரியனவாக இருந்த அனைத்தையும் இழந்து கின்றதோடு, தம் உயிரையும் இழக்கத் துணிக்தார்.

46. சத்தி நாயனர்

சோழ காட்டில் வரிஞ்சையூர் என்பது வேளாண் செல்வர் மலிந்த பதி. அந்தக் குலத்தில் சத்தியார் என்பவர் தோன்றினர். சிவபிரானுடைய திருவடித் தொண்டை வாழ்க்கையின் பெரும் பயணுக எண்ணி வாழ்ந்தார் அவர். அவருடைய இயல்பான பெயர் இன்னதென்று தெரிய வில்லை.

அவர் இறைவனுடைய அன்பர்களிடத்தில் மிக்க ஈடு பாடு உடையவராக இருந்தார். நடமாடும் தெய்வமாக அவர்களே எண்ணி வழிபட்டார். அடியாரிடம் உலகம் முழுவதும் மதிப்பு வைத்து ஒழுகவேண்டும் என்பது அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/61&oldid=585695" இலிருந்து மீள்விக்கப்பட்டது