பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56, நாயன்மார் கதை

பேராவல். அடியாரைக் கண்டால் எழுந்து வணங்கி உட சரிக்காதவர்களே விலங்கெனவே எண்ணினர். அடியவர் களே யாரேனும் இகழ்ந்தால் அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கமாட்டார். அவர்களுக்குத் தக்க தண் டனே அளிக்கத் துடிப்பார். நாளடைவில் அவர் சினம் மிக்கது. யாரேனும் அடியார்களே இகழ்ந்தால் உடனே ஒரு கிடுக்கி யைக் கொண்டு, இகழ்ந்தவர்களுடைய நாவைப் பற்றி இழுத்து வாளால் அரியத் தொடங்கினர். அவர் மிடுக்கும் உடல் வலிமையும் உடையவராதலின் இவ்வாறு செய்ய முடிந்தது. இந்த வலிய சத்தியை உடையவராக இருந்த தல்ைதான் அவருக்குச் சத்தியார் என்ற பெயர் உண்டா யிற்று.

அடியவர்களே இகழ்பவர் யாராயினும் சத்தியார் வரு கிருரென்ருல் அஞ்சி நடுங்குவர். இதனால் மனம் போனபடி யெல்லாம் அடியவர்களேப் பழிக்கும் செயல் குறைந்து வந்தது. எங்கிருந்தாவது சத்தியார் வந்து கேட்டுவிட்டால் என் செய்வது என்று அஞ்சி நடுங்கினர்கள், அடியாரைப் பழிக்கும் இழிதகைமை யுடையவர்கள்.

தீங்கு செய்வாரைத் தண்டிப்பது அறம். பயிருக்குக் களேயெடுப்பது போன்றது அது. பிறர் திங்கு செய்வதைக் கண்டிருந்தும் அதைக் கண்டிக்கப் பலருக்கு வாய் எழாது. 'நமக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு" என்று ஒதுங்கி விடுபவர்களே பலர். அவ்வாறு இன்றி ஏது வரினும் வரட்டும் என்று துணிந்து தீயவை புரிபவர்களைத் தண்டிக் கும் வீரம் எல்லோருக்கும் வருவதில்லை. சத்தியார் இந்த வீரம் பெற்றவர்.

சிவனுக்கு அபசாரம் செய்வதைக் காட்டிலும் சிவனடி யாருக்கு அபசாரம் செய்வதல்ை மிக்க துன்பம் நேரும். ஆதலின் சிவனடியாருக்கு யாரும் தீங்கு செய்யாமல் பாது காப்பது வீரம் உடையவர்கள் கடமை. இதை மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/62&oldid=585696" இலிருந்து மீள்விக்கப்பட்டது