பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் 57

கொண்டு வாழ்ந்த சத்தியார் அறுபத்துமூன்று நாயன்மார் களில் ஒருவராக எண்ணும் பெருமையைப் பெற்ருர்,

47. ஐயடிகள் காடவர்கோன் நாயனர்

மன்னவர்க்கு மன்னராய்ப் பல்லவ குலத்தில் உதித்து அரசாண்டார் ஐயடிகள் காடவர்கோன். தம் குடிமக்க ளுக்கு வறுமை வாராமல் அவர்கள் வளவாழ்வில் இன்புறு மாறு செய்தார். வேற்று நாடுகளுக்குச் சென்று அங் குள்ள மன்னர்களை வென்று அவர்களுடைய காட்டையும் தம் அரசாட்சியின் கீழ்க் கொண்டு வந்தார். தம் ஆட்சிக்கு அடங்கிய நில முழுவதிலும் எல்லா உயிர்களும் இனிது அமரும்படி செங்கோல் செலுத்தி, எங்கும் சிவநெறியும் வேத நெறியும் விளக்கம் பெறும்படியாக ஆண்டு வந்தார்.

மன்னர் பலர் தமக்குப் பணிசெய்ய, வடமொழியும் தென் தமிழும் சிறப்புற, பலவகைக் கலைகளும் வளர அரசளித்து வந்த அவருக்கு, அரசாட்சியாகிய பாரம் சிவபிரானே எப்போதும் வழிபட்டு வாழ்வதற்குத் தடை யாக இருக்கும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனல் தம்முடைய குமரனுக்கு முடிகுட்டி, ஆளும் பொறுப்பை அவன் பால் ஒப்பித்துத் தாம் விரும்புகின்ற சிவத்தொண் டைச் செய்ய முற்பட்டார். அரச திேப்படி நாடு காக்கும் பெருங் கடமையை இன்னவாறு ஆற்ற வேண்டுமென்று தம் புதல்வனுக்கு அறிவுறுத்தி விட்டுப் பூட்டவிழ்ந்த ஆணேறு போலப் புறப்பட்டார்.

சிவபிரான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக் கெல்லாம் சென்று தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் அவரிடம் இருந்தது. அந்த ஆவலேத் தணிக்கப் புகுந்தார். ஒவ்வொரு பதியாகச் சென்று அங்குள்ள சிவபெருமான் திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/63&oldid=585697" இலிருந்து மீள்விக்கப்பட்டது