பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் 59.

னத்திலே கொண்டுபோய்க் கொளுத்துவதற்கு உரியனவே. இதனே நாம் நல்ல கினைவோடு இருக்கும்போதே கினைக்க வேண்டும். இங்கே வாழும்போது உற்ருர் உறவினராகிய துணையை நாடிக் கொள்கிருேம், அவர்களால் நலம் பெறு கிருேம். ஆனல் உடம்பு பிணமான பிறகு அந்த உற்ரு ரால் பயன் இல்லை.

சிறு குழந்தையாக இருக்கும்போது கம்மைப் போன்ற குழந்தைகளைத் துணையாகக் கூட்டிக்கொண்டு விளையாடு கிருேம். ஆண்டு முதிர்ந்தால் குழந்தை விளையாட்டை விட்டு விட்டுக் கல்வி கற்கப் புகுகிருேம்; நம்மினும் சிறந்த ஆசானைத் துணேயாக நாடுகிருேம். பெரிய ஆசானே காடுபவர்கள் பெரிய கல்வியை அடைகிருர்கள். அப் படியே பொருள் முட்டுப்பாடு வந்தால் பொருளாளரை நாடுகிருேம். பெரிய பொருளாளரை காடுபவர்களுக்குப் பெரிய முட்டுப்பாடு வந்தாலும் இடர் வராது.

ஆகவே, மிகப் பெரிய துணையை நாடுவது மனித இயல்பு. ஒர் ஊருக்குத் தலைவனது துணே கிடைத்தால் அந்த ஊரளவில் நாம் செல்வாக்குப் பெறலாம்; அந்த ஊர்க்காரர்கள் நம்மிடம் அன்பு வைப்பார்கள். ஒரு நாட்டுக்குத் தலைவனது பெருந்துணை கிடைக்குமானல் அந்த காடு முழுவதும் நமக்கு நலம் உண்டாகும். அந்தத் தலைவன் உயிருடன் இருக்குமளவும் அந்தச் செல்வாக்கு கிற்கும். அவன் போய்விட்டால் அடுத்த தலைவனுக்கும் கல்லவகைப் பழகி அவனுடைய துணையையும் பெறும் ஆம் றல் நமக்கு இருந்தால், முன் பெற்ற நலம் பின்னும் கிடைக் கும். இது உலகியலில் காணுகின்ற உண்மை.

எல்லாவிடத்துக்கும் எல்லாக் காலத்திலும் தலைவனுக இருப்பவனுடைய துணை கிடைக்குமானல் எல்லா இடத் திலும் எல்லாக் காலத்திலும் நமக்கு நலம் கிடைக்கும். அப்படி உள்ள ஒருவனேத் தேடிப் பிடித்துப் பற்றினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/65&oldid=585699" இலிருந்து மீள்விக்கப்பட்டது