பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$60 நாயன்மார் கதை

இந்த உடம்பை விட்டு உயிர் வேறு உடம்பை எடுத்தாலும் அங்கும் கலம் உண்டாகும். அத்தகைய தலைவன்தான் நடராசப் பெருமான். அவன் தில்லச் சிற்றம்பலத்திலே எழுந்தருளி யிருக்கிருன். அவனேச் சேர்ந்து உறவு பிடித் துக்கொண்டால் எந்த ஊர் சென்ருலும், எந்த உலகம் சென்ருலும், எந்தப் பிறவி எடுத்தாலும் அவன் அருள் துணை கிடைக்கும். இத்தகைய உணர்வைப் பெறுவதற் குரிய அறிவு இந்த மனிதப் பிறவியில் கிடைத்திருக்கிறது. ஆதலின் இப்பிறவி முடியும் முன்னரே தில்லைச்சிற்றம் பலத்தானுடைய உறவினர் கூட்டத்திலே நாம் சேர்ந்து விடவேண்டும்.

இந்த அரிய கல்லுரையைத் தம்முடைய நெஞ்சைப் பார்த்து உரைப்பாராய், ஐயடிகள் காடவர்கோன் காயனர் திருச்சிற்றம்பலத்தின் முன் கின்று ஒரு வெண்பாவைப் பாடினர்.

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்ருரும் கோடுகின் ருர்; மூப்பும் குறுகிற்று-நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணுமுன், நன்னெஞ்சே! தில்லைச்சிற் றம்பலமே சேர். (கன்னெஞ்சே - எனக்கு நல்லது செய்யவேண்டும் என்று எண்ணுகிற நெஞ்சமே, ஒடுகின்ற நீர்மை - ஒடியாடி இயங்குகின்ற இயல்பு, ஒழிதலும் - (உடம்புத் தளர்ச்சி காரணமாக) நீங்கின வுடனே, உற்ருரும் . கமக்கு அருகில் உள்ள உறவினர்களும், கோடுகின்ருர் - கம்முடன் வருவதற்கும் நம்மை காடுவதற்கும் கம் மிடம் நாலு வார்த்தை பேசுவதற்கும் விருப்பமின்றி முகம் கோணு கின்ருர்; மூப்பும் குறுகிற்று - உடல் தளர்ச்சிக்கு மேலே கிழப் பருவமும் வந்து அடைந்தது; காடுகின்ற . இதுகாறும் உறவினர் களும் பிறரும் காடி வருகின்ற, நல் அச்சு . கல்ல உடம்பானது, இற்று - உயிரற்றுப் போய், அம்பலமே - வெறும்வெளி யாகிய மயானத்தை, கண்ணுமுன் அடையாததற்கு முன்பே, தில்லைச் சிற்றம்பலமே வேறு எவ்விடத்தையும் அடையாமல் கடராசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/66&oldid=585700" இலிருந்து மீள்விக்கப்பட்டது