பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாயன்மார் கதை

இப்படி உள்ள பலவகைத் திருத் தொண்டுகளில் திருவிளக்கேற்றுதல் ஒன்று. அது இறைவன் திருவுருவை யாரும் காணும்படி செய்யும் தொண்டு.

" விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்க்கெறி ஞான மாகும் ’’ என்று அப்பர் சுவாமிகள் அந்தத் தொண்டைச் சிறப் பாகப் பாடியிருக்கின்ருர். அத்தகைய சிறந்த தொண்டைச் செய்தவர் கணம்புல்ல காயஞர்.

வெள்ளாற்றின் தென் கரையில் உள்ள இருக்கு வேளுர் என்னும் தலத்தில் தோன்றியவர் அவர். அந்த ஊரில் ஊருக்கெல்லாம் பெரிய காட்டாண்மைக்காரராய் வாழ்ந்து வந்தார். மிக்க செல்வமும் சிறந்த குணமும் கிரம்பியவர் அவர். இறைவனுடைய திருவடியே இணே யற்ற மெய்யான பொருள் என்ற கருத்தை உடையவர். நாள்தோறும் திருக் கோயிலில் பல விளக்குகளே ஏற்றிப்

பணி செய்து வந்தார்.

அவருக்கு வறுமை வந்து எய்தியது. நன்ருக வாழ்ந்த ஊரில் வறியராக வாழ மனம் இல்லாத காயனர் தில்லைமா நகர் வந்து சேர்ந்தார். அங்கே திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றும் திருப்பணியை விடாமல் செய்து வந்தார். அதன் பொருட்டு வீட்டில் உள்ள பண்டங்களே ஒவ்வொன்ருக விற்ருர். அவ்வாறு செய்யச் செய்யப் பண்டங்கள் குறைந்து வந்தன. கடைசியில் விற்பதற்கு ஒன்றும் இல்லாமற் போகவே, வேறு என்ன செய்வது என்று யோசித்தார். பிறரிடம் சென்று இரந்து பொருள் பெற்று அதைக் கொண்டு திருவிளக்குத் தொண்டு செய்ய அவருக்கு விருப்பம் இல்லே. ஆதலால் மெய் வருந்தி ஏதேனும் தொழில் செய்து தம் பணியை நடத்த கினேத் தார். ஒருவரை அணுகி அவருக்கு ஏவல் புரிவதற்கும் அவர் மனம் துணியவில்லே. இறுதியாக ஊருக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/68&oldid=585702" இலிருந்து மீள்விக்கப்பட்டது