பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணம்புல்ல நாயனுர் 63

புறம்பே உள்ள காட்டுப் புறமான இடங்களில் உள்ள கணம்புல் என்ற ஒருவகைப் புல்லே அறுத்துக் கொண்டு வந்து அதை விற்றுப் பெற்ற பொருக்ளக் கொண்டு நெய் வாங்கித் திருவிளக்கு ஏற்றினர்.

இவ்வாறு செய்யும்போது ஒரு நாள் அவர் அறுத்துக் கொண்டு வந்த புல் விலே போகவில்லை; ஆகவே கெய் வாங்கப் பொருள் கிடைக்கவில்லை. அவருக்கு ஒன்றும் தோன்ருமல் வருந்தி, அந்தப் புல்லேயே விளக்கைப் போல வைத்து எரித்தார். இப்படியே சிலநாட்கள் செய்துவந்தார். யாமம் தோறும் விளக்கு எரிப்பது வழக்கம். கெய் விளக்காக இருந்தால் கின்று எரியும். புல் திகு திகு என்று உடனுக்குடன் எரிந்துவிட்டது. அதல்ை யாமம் தோறும் எரிப்பதற்குப் புல் போதவில்லை. கான்காவது யாமத்தில் வைத்திருந்த புல்லெல்லாம் எளிபடவே மேலே எரிக்க ஒன்றும் இல்லை. அந்தச் சமயத்தில் எங்கே போய் எதைக் கொணர்வது? ஒரு கணம் அவர் கலங்கினர். உடனே தெளிவு பெற்றுத் தம்முடைய திருமுடியையே விளக்கி லிட்டு எரிக்கலானர்.

இறைவன் அவருடைய முறுகிய பேரன்பைக் கண்டு திருவருள் பாலித்தான். தம் உடம்புக்கு வரும் துன்பத்தை எண்ணுமல் தாம் மேற்கொண்ட தொண்டை முட்டின்றி முடிக்கும் கெஞ்சத் திண்மை கணம்புல்ல காயனரிடம் இருந்தது. அவரை அப்பர் சுவாமிகள் இரண்டிடங்களில் பாராட்டி யிருக்கிருர். -

  • வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துதல் அருந்த வத்த கணம்புல்லர்க் கருள்கள் செய்து

காதலாம் அடியார்க் கென்றும் குணங்களைக் கொடுப்பர் போலும்

குறுக்கைவி ரட்ட ளுரே '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/69&oldid=585703" இலிருந்து மீள்விக்கப்பட்டது