பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாயன்மார் கதை

என்பதில், அருந்தவத்த கணம்புல்லர் என்று சிறப்பித் தார். தம் திருமுடியையே விளக்காக எரிக்கச் சரீராபி மானம் போனுல்தான் இயலும், அதைக் காட்டிலும் சிறந்த தவம் ஏது?

" நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்

எண்டோளர் எண்ணிறந்த குணத்தி ளுலே கணம்புல்லன் கருத்துகந்தார்

§ 3.

என்றும் பாடினர்.

49. காரி நாயனர்

திருக்கடவூர் என்னும் தலத்தில் தோன்றியவர் காரி நாயனர். தமிழில் பெரும்புலமை வாய்ந்தவராக விளங் கினர் அவர். அக்காலத்தில் பல பழைய பாடல்களுக்குச் சொற்கள் தெளிவாக இருப்பினும் பொருள் விளக்க மில்லாமல் இருந்தமையால், அப்பாடல்களே மக்கள் நாடாமல் போயினர். அதல்ை அவை வழக்கு இழந்து வந்தன.

இதனே அறிந்த காரியார் அத்தகைய பாடல்களே யெல்லாம் தொகுத்து ஒரு கோவை யாக்கினர். அந்தப் பாடல் தொகுதிக்குக் காரியார் கோவை என்ற பெயர் வழங்கியது.

அறத்தைச் செய்பவர்கள் சிறந்தவர்களே; ஆனல்அவ் வறத்தை மங்காமல் காப்பாற்றி வருகிறவர்களைப் பின்னும் சிறந்தவர்களென்று சொல்ல வேண்டும். அறம் செய்தார் பெயரையும் அறத்தையும் தம் பெயரையும் மறையாமல் கிலைநிறுத்துகிறவர்கள் அவர்கள். அப்படியே நூல் செய்த புலவர்கள் போற்றுவதற்குரியவர்கள். ஆனல் அந்த நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/70&oldid=585704" இலிருந்து மீள்விக்கப்பட்டது