பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி தாயனூர் 65

களும் பாடல்களும் நாளடைவில் மறைந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து வருபவர்கள் மிகவும் பாராட்டு தற்கு உரியவர்கள். புதிய கோயில் கட்டுவதைவிடப் பழைய கோயிலைப் பாதுகாத்தல் சிறந்தது. அப்படியே புதிய பாடல் இயற்றுவதை விடப் பழம் பாடல்களே க் காப்பாற்றுவது சாலச் சிறந்தது.

காரியார் இந்த அரிய காரியத்தைச் செய்தார். பொரு ளறியாமையால் மக்கள் மறந்துபோன பாடல்களேத் தொகுத்துக் கோவையாக்கி மீண்டும் உலவச் செய்தார். அதோடு மற்ருெரு பெருஞ் செயலேயும் செய்தார். பொருள் தெரியவாராத காரணத்தால்தான் அந்தப் பாடல்களே மக்கள் புறக்கணிக்கலாயினர். இதனை அறிந்த காரியார் தாம் தொகுத்த செய்யுட்களுக்கு உரை கண்டு விளக்கினர். அவற்றைச் சேரசோழ பாண்டிய மன்னர்களிடம் சென்று கூறி நயமாக உரை விரித்தார். அவற்றைக் கேட்ட மன்னர்கள் உவந்து காரியாரைப் பாராட்டிப் பரிசில் வழங்கினர்; பெருநிதி அளித்தனர்.

அந்த கிதி இறைவன் திருவருளால் வந்தது எனக் கொண்ட காரியார், அதனைத் தக்க வழியில் பயன்படுத்த எண்ணினர். அங்கங்கே சிவபெருமானுக்குக் கோயில்கள் கட்டினர். பழைய சொற்கோயில்களுக்கு உயிரூட்டி யாவரும் பயன்பெறச் செய்த புலமைத் தொண்டோடு, கற்கோயில்களேயும் கட்டி அன்பர்கள் பயனடையச் செய்தார். இந்த இரண்டினலும் மக்கள் அனைவருடைய பேரன்புக்கும் அவர் உரியவரானர்.

சிவனடியார்களை வழிபட்டு அவர்களுக்கு வேண்டிய வற்றை அளித்துப் போற்றினர். இவ்வாறு பல தொண்டு களைச் செய்து பலரும் போற்ற வாழ்ந்து சிறப்புற்ருர் காரி காயர்ை. -

நா.க-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/71&oldid=585705" இலிருந்து மீள்விக்கப்பட்டது