பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாயன்மார் கதை

50. நின்றசீர் நெடுமாற நாயனர்

மதுரையில் இருந்து செங்கோல் ஒச்சிய பாண்டியருள் ஒருவர் நெடுமாறர். அவர் இயல்பாகக் கூன்விழுந்த உடலுடையவர். சைன சமயத்தவர் பலர் சூழ்ந்து தம் சமய நெறியைப்போதிக்க அவர் சைனரானர். சோழன் மகளாராகிய மங்கையர்க்காசியாரை முன்பே மணந்து கொண்டவர் அவர். அவர் சைனரானலும் அவருடைய மாதேவியார் சைவ ஒழுக்கம் தவருமல் கின்ருர், திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அப் பாண்டியருக்கு வந்த வெப்பு நோயை நீக்கிக் கூனேயும் போக்கிச் சைனர் களுடன் வாதம் செய்து வென்ருர். பாண்டிய மன்னரும் பிறரும் மீண்டும் சைவர்களாயினர். கூன் நீங்கி சிமிர்ந்த பாண்டியர் கின்ற சீர் நெடுமாறர் என்று சிறப்பாக வழங்கும் நிலைபெற்ருர்.

சிவநெறியில் கின்று ஆலவாய் இறைவனைத் தம் துணைவியாராகிய மங்கையர்க்காசியாரோடும் வழிபட்டுச் சிறந்த பக்தராக விளங்கினர் நெடுமாறர். அவருடைய வீரத்தை எண்ணுமல் வடநாட்டு வேந்தர் அவர் காட்டின் மேல் படையெடுத்து வந்தனர். திருநெல்வேலியில் பெரும் போர் நிகழ்ந்தது. அப்போரில் பாண்டி காட்டுப் படைகள் மிக்க விறலுடன் போர் செய்தன. நெடுமாறர் தாமே படைகளுடன் சென்று போர் புரிந்தார். அப் போரில் அவருக்கே வெற்றி கிடைத்தது. பகை மன்னர் தோற்று . ஒடிப்போக, வெற்றிமாலே சூடினர் நெடுமாறர். நெல்வேலி வென்ற நெடுமாறர் என்று புலவர்கள் அவரைச் சிறப்பித்தார்கள்.

இறைவன் திருவருளே தமக்கு வெற்றி வாங்கித் தந்தது என்ற நினைவோடு அவர் சிவபெருமானத் தொழுது வணங்கினர். திருற்ேறின் நெறிவாழப் பல அருந்தொண்டுகள் புரிந்து வாழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/72&oldid=585706" இலிருந்து மீள்விக்கப்பட்டது