பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயிலார் நாயனுர் 5?

51. வாயிலார் நாயனர்

மனிதன் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களினலும் செயல் புரிகிருன். சினேப்பு, பேச்சு, செயல் என்று அக் கரணங்களின் இயக்கத்தைக் குறிப்பது வழக்கம். இந்த மூன்று கரணங்களும் மனிதனுடைய பிறப்பின் சிறப்பை எடுத்துக் காட்டுவனபோல, மற்ற உயிர்களிடம் இருப்பனவற்றைவிட மிக மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அம் மூன்றிலும் அவனது மனம் பெற்ற வளர்ச்சி மிகவும் அற்புதமானது. மனத்தின் ஒரு பகுதியே அறிவு. அது மனிதனிடத்தில் மிகவும் நுட்பமாகவும் விரி வாகவும் அமைந்திருக்கின்றது. நுண்மாண் நுழைபுலம்’ என்றும், அஃகி அகன்ற அறிவு என்றும் மனித அறிவைப் பாராட்டிப் பேசுவார்கள் புலவர்கள்.

உடம்பாலும் வாக்காலும் செய்யும் செயல்களால் அடையும் பெருமையைவிட உள்ளத்தால் செய்யும் செயல் களே மனிதனுக்கு அதிகப் பெருமையை உண்டாக்கு கிறது. முன்னுள்ள அநுபவத்தையும் கிகழ்காலச் செயல் களையும் வருங்கால விளைவுகளையும் ஓர்ந்து கலந்திங்குகளே காடி ஆராயும் ஆற்றலே மனிதன் படைத்திருக்கிருன். ஆதலின் உள்ளத்தினல் மேலும் மேலும் உயரும் ரிலையில் இறைவன் அவனே வைத்திருக்கிருன்.

இறைவனே மனமொழி மெய்களால் வணங்க வேண்டும். T.

'வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனே'

என்று திருநாவுக்கரசர் அருளினர். உடம்பால் வணங்கி வாயினல் வாழ்த்தி மனத்தால் தியானம் செய்யவேண்டும். உடம்பால் வணங்குவது எளிது; அதைவிட அளிது புகழ் பாடுதல்; அதையும்விட அரிது தியானித்தல். காயிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/73&oldid=585707" இலிருந்து மீள்விக்கப்பட்டது