பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாயன்மார் கதை

வாசிகம், மானசம் என்ற மூன்று தொண்டுகளில் மான சிகம் சிறந்ததென்று நூல்கள் கூறும். மானசிக பூசை சிறந்ததென்பதைப் பெரியோர்கள் வாக்கால் தெரிந்து கொள்ளலாம். உள்ளத்தால் செய்வனவற்றின் பெருமை யைத் தெரிவிக்க ஒரு கதை சொல்வதுண்டு.

ஒருநாள் அருச்சுனன் கைலாசத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே இருந்த சிவ கணங்கள் கில வுலகில் பூசை புரிவார்கள் இட்ட கிர்மாலியத்தை வாரி வெளியிலே கொட்டிக் கொண்டிருந்தார்கள். வில்வமும் பல மலர்வகைகளும் மலேபோலக் குவிந்திருந்ததைப் பார்த்தபோது, இது நம்முடைய பூசையின் கிர்மாலியம்’ என்று அருச்சுனன் கினேத்தான். சிவகணங்களே நோக்கி, ::இது யார் செய்த பூசையின் கிர்மாலியம்?” என்று கேட் டான். 'பூலோகத்தில் பஞ்சபாண்டவர்கள் என்று ஐந்து பேர்கள் நல்ல சிவ பக்தர்கள். அவர்களில் ஒருவன் பூசை யில் போட்டது" என்ருர்கள். அவனுக்குச் சற்றே பெரு மிதம் உண்டாயிற்று. -

"அவன் பெயர் என்ன?”

வீமனும். இந்த மலையைப் போல அந்தப் பக்கம்

இன்னும் குவிந்து கிடக்கிறது" என்ருர்கள் சிவ கணங்கள். - -

"விமன!"

அருச்சுனனுக்கு வியப்புத் தாங்கவில்லை.

'அந்த அண்ணு உட்கார்ந்து சிவ பூசை பண்ணியதாக நமக்குத் தெரியவில்லையே! என்று எண்ணமிடலாளுன் அவன். பிறகு,"அருச்சுனன் என்பவன் செய்த பூசா கிர்மாலி யம் எது?" என்று கேட்டான். அது அளவிடற்கரிய பெரு மலையாக இருக்கிறது என்ற விடையை எதிர்பார்த்தான். அவர்களோ, 'அதுவா? அங்கே ஒரு குடலையில் இருக் கிறது' என்று அலட்சியமாகச் சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/74&oldid=585708" இலிருந்து மீள்விக்கப்பட்டது