பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயிலார் நாயனுர் 69

அருச்சுனனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனம் சுழன்றது. "வீமன் பூசை செய்ததை நான் பார்த்த தில்லையே' என்ருன். -

"அவன் மனசினலே பூசை செய்கிறவன். ஒரு கந்த வனத்தைக் கண்டால் அங்குள்ள அத்தனை மலர்களேயும் பத்திரங்களேயும் சிவபிரானுக்கு என்று மனத்தால் அர்ப் பித்துவிடுவான். அது இங்கே மலையாகக் குவிந்துவிடும்."

அருச்சுனனுக்கு மானசிக பூசையின் சிறப்பு கன்கு புலயிைற்று. -

மயிலாப்பூரில் இவ்வாறு உள்ளத்தால் பூசை இயற்றிய அன்பர் ஒருவர் இருந்தார். அவரை வாயிலார் காயனர் என்பர். வேளாண் குடியில் தோன்றிய அவர் சிவபிரான உள்ளத்தால் வழிபடும் திருத்தொண்டில் சிறந்து விளங் கினர். மனத்துக்குள் தியான முறையில் கோயில் கட்டிப் பூசை செய்தார். மறவாமையால் மனக்கோயில் அமைத்துச் சிவபிரான உள் இருத்தி ஞான விளக்கு ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது அமைத்து அருச்சனை செய்து வந்தார். புறத்தே காணும் மலர், மஞ்சனம், அமுது முதலிய பொருள்களே வைத்து வழிபடும் போதே நமக்கு மனம் பலவாருகச் சிதறுகிறது. அவருக்கோ மனத்தில் கினைத்தது அப்படியே சின்றது. அதாவது எண்ணியதை மறப்பதில்லை. துரய உள்ள மாத லின் ஒருமைப்பாட்டோடு எண்ணிய எண்ணம் கன்ருகப் பதிந்தது. அதனால் அவர் மனத்தாலே ஆலயம் அமைத்து, மனத்தாலே பூசை செய்தார். இவ்வாறு செய்வதிலே நெடும்போது கழித்தார். மானசிக பூசையில் காலம் போவதே தெரியாது. மனம் ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் சிறிது காலமும் நெடுங்காலமாகத் தோன்றும். ஒருமைப் பட்டால் நெடுங்காலமும் குறுகிவிடும். தியானத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/75&oldid=585709" இலிருந்து மீள்விக்கப்பட்டது