பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாயன்மார் கதை

தால் காலத்தை வெல்லலாம் என்பதற்கு இதுதான் பொருள்.

வாயிலார் இந்தச் சிவவாழிபாட்டை நெடுகாட் செய்து அதன் பயனகிய இன்பத்தை நுகர்ந்து சலனமற்ற அமைதி யான வாழ்க்கையிலே சிறந்து விளங்கினர்.

52. முனையடுவார் நாயனர்

பழங்காலத்தில் வீரத்தில் சிறந்த சிலர் அங்கங்கே தம்மோடு வேறு வீரர்களையும் தொகுத்து அவர்களுக்குத் தலைவராக இருந்தார்கள். அரசர்களுக்குள் போர் மூண்ட போது, அவருள் யாரேனும் தம்முடைய உதவியை வேண்டினல் அவர் கட்சியில் சேர்ந்து போர் செய்து வெற்றி உண்டாகும்படி செய்வார்கள். திருக்கோவலூரில் இருந்த மலையமான் திருமுடிக் காரி என்னும் வள்ளல் அவ்வாறு விளங்கிய பெருமறவன். அவன் எந்த அரசருக்குத் துணையாகப் போகிருனே அவர் பங்கில் வெற்றி உறுதி என்ற கம்பிக்கை அக்காலத்து மக்களுக்கு இருந்தது. சங்கநூல்களில் சோழன் மறவன், பாண்டியன் மறவன் என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். சோழனுக்குப் படைத் துணையாகச் செல்லும் வீரன், பாண்டியனுக்குப் படைத் துணையாகச் செல்லும் வீரன் என்பதே அத் தொடர்களின் பொருள்.

மலேயமான் திருமுடிக்காரி தம்முடைய படையுடன் பேரரசர்களுக்குத் துணையாகச் சென்று போர் செய்து, அம் மன்னர்கள் தரும் பொருளே உடன் வந்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பான்; எஞ்சியவற்றை யெல்லாம் தன்னைப் பாடிவரும் புலவர்களுக்கும் வறியவர்களுக்கும் கொடுப் பான். அவனுடைய வீரம் அவனது வள்ளன்மையை வளர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/76&oldid=585710" இலிருந்து மீள்விக்கப்பட்டது