பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் கதை (மூன்ரும் பகுதி)

29. ஏயர்கோன் கலிக்காம நாயனர்

காவிரியின் வடகரையில் பெருமங்கலம் என்று வளம் மிக்க ஊர் ஒன்று உண்டு. அங்கே வேளாண்மை செய்யும் ஏயர் குலம் என்ற ஒரு குலத்தினர் பலர் வாழ்க் திருந்தனர். அக் குலத்தினர் சோழ அரசர்களின் சேனபதி களாக இருக்கும் பெருமை உடையவர்கள்.

அந்தக் குலத்தில் கலிக்காமர் என்பவர் சிறந்த சிவ பக்தராகத் திகழ்ந்தார். திருப்புன்கூர்ச் சிவாலயத்தில் மிகுதியான திருப்பணிகளைச் செய்தவர் அவர். சிவனடி யார்களிடம் பெருமதிப்பு வைத்து அவர்களைப் போற்றி வழிபட்டு வந்தார். .

அக்காலத்தில் திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனருக் காக இறைவன் பரவை நாச்சியாரிடம் தாது சென்ற அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் கேட்ட கலிக்காமர், நெஞ்சிலே சிறிதும் அச்சம் இல்லாமல் ஒரு பெண்ணினிடம் எம்பிரானைத் துாது விடுவதாவது! இதைக் கேட்டும் உயிர் வாழும் அபாக்கியம் எனக்கு இருக்கிறதே!' என்று வருந்தினர். "இந்தச் செயலைச் செய்தவனுடைய மனம் எவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்! அவனே ாான் காண்பேனகில் என்ன ஆகுமோ, அறியேன்" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/7&oldid=585640" இலிருந்து மீள்விக்கப்பட்டது