பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நாயன்மார் கதை

பொருமினர். அவருடைய சினத்தை ஊரிலுள்ளார் உணர்ந்து கொண்டனர்.

இது சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் எட்டியது. "கான் செய்தது பிழைதான். அவர் என்மேல் கொண்ட சினத்தை மாற்றுவது எப்படி? இறைவனே, தோன் திரு வருள் செய்ய வேண்டும்' என்று அவர் ஒவ்வொரு நாளும் இறைவனே வேண்டிக் கொண்டு வந்தார்.

இந்த இரண்டு தொண்டர்களுக்கும் இடையே உள்ள பிணக்கைத் தீர்க்க வேண்டும் என்று திருவுள்ளங் கொண்ட இறைவன் கலிக்காமருக்குச் சூலை நோய் வரச் செய்தான். பின்பு அவர் கனவிற் சென்று, "இந்தச் சூலை வன்ருெண்டன் வந்து தீர்த்தால் அன்றிப் போகாது” என்று அருளிச் செய்தான். கலிக்காமர், இந்தச் சூலை நோயால் வரும் துன்பத்தைப் பொறுத்தாலும் பொறுப் பேனேயன்றி, பெரிய பிழையைச் செய்த வன்ருெண்டனல் உண்டாகும் பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்ற உறுதியோடிருந்தார்.

இறைவன் சுந்தரரிடம், "நம்முடைய ஏவலால் கலிக்காமனுக்குச் சூலை நோய் உண்டாகி யிருக்கிறது. அதை நீ போய்த் தீர்ப்பாயாக' என்று உணர்த்தின்ை. அதனை உணர்ந்த சுந்தரர், இறைவன் திருவருளே கினைந்து மகிழ்ந்து வணங்கினர். எம்பெருமான் ஏவலின்படியே அவர் புறப்பட்டு விரைந்து சென்ருர். தமது வருகையைக் கலிக்காமருக்குச் சொல்லிவிட்டார்.

அது கேட்ட கலிக்காமர், "ஐயோ! இந்தத் துன்பத் துக்கு என் செய்வேன்! அவன் இங்கே வந்து என் நோயைத் தீர்ப்பதற்கு முன் நான் இறந்து போவது நல்லது. இந்தச் குலையையும் இதுபற்றியிருக்கும் வயிற்றையும் கிழிப்பேன்" என்று தம் உடைவாளே எடுத்துக் கிழித்துக் கொண்டார். சூலையோடு உயிரும் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/8&oldid=585641" இலிருந்து மீள்விக்கப்பட்டது