பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழற்சிங்க நாயனுர் 73

களோடு போர் செய்து வென்று அவர்கள் அளித்த திறை களைக் கொணர்ந்து குவித்தார். அவற்றை கல்லற நெறி யிலே செலவிட்டார்; சிவ தருமங்களே ஆற்றினர்; சிவ னடியார்களுக்கு ஆவன செய்தார்.

அவ்வப்போது சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசித்துவரும் வழக்கம் உடையவர் கழற்சிங்கர். ஒருமுறை சிவபுரமென்று எண்ணுதற்குரிய பெருமையை யுடைய திருவாரூருக்குத் தம்முடைய பரி வாரங்களுடன் சென்றிருந்தார். திருக்கோயிலுள் புக்கு முறைப்படியே தரிசனம் செய்துகொண்டு வந்தார். புற்றிடங் கொண்ட காயகர் திருமுன் கின்று தரிசித்து, விழுந்து வணங்கித் துதித்து உருகினர். இருந்தாடழக கிைய தியாகராச மூர்த்தியையும் வழிபட்டு இன்புற்ருர். அவருடன் வந்திருந்த முதல் தேவியாகிய பட்டத்தரசியும் அந்தக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு மகிழ்ந்து வந்தாள். மிகப் பெரிய கோயிலாதலின் மெல்லப் பல மண்டபங்களேயும் சங்கிதியையும் பார்த்துக் கொண்டு வந்தாள்.

திருவாரூர்த் திருக்கோயில் ஆறு வேலி நிலப் பரப் புடையது; திருக்குளமாகிய கமலாலயமும் ஆறு வேலி: தியாகராசப் பெருமானுக்கு உவப்பான செங்கழுநீர் விளேயும் ஒடையும் ஆறு வேலி. செங்கழுநீர் மாலையையும் பிற மலர்களின் மாலைகளையும் பல தொண்டர்கள் தொடுத்து இறைவனுக்கு அணியக் கொடுப்பார்கள். பூத் தொடுப்பதற்கென்றே பெரிய கோயில்களில் தனி மண்ட பம் இருக்கும். திருவாரூரிலும் அப்படி ஒரு மண்டபம் உண்டு. கழற்சிங்கருடைய மாதேவி கோயிலைச் சுற்றி வந்தவள், மாலே தொடுக்கும் மண்டபத்துக்கு வந்தாள். பலர் மிக்க அன்போடு பலவகையான மாலைகளேத் தொடுத் .துக் கொண்டிருந்தார்கள். வண்ணமும் மணமும் உடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/79&oldid=585713" இலிருந்து மீள்விக்கப்பட்டது