பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'74 நாயன்மார் கதை

அவற்றைத் தொடுப்பது ஒரு கலை. அந்தக் கலையில் வல்ல வர்களின் கைத் திறனைப் பார்த்துக் கொண்டு பல்லவ அரசி அங்கே சற்று கின்ருள். அப்போது ஒரு பூ மண்டபத் துக்கு அருகே சிதறி வீழ்ந்தது. அதை எடுத்த அரசி அதை மோந்து பார்த்தாள். பிறர் தன் கையில் மலரைக் கொடுப்பதும் அதை மோந்து பார்ப்பதும் அவளுடைய வழக்கம். அதனல் பூவை எடுத்தவுடன் மோந்து பார்த்தாள். சிவபிரான் பூசைக்குரிய மலரை மோப்பது தவறு. அதல்ை பூவைப் பறிப்பவரும் கட்டுபவரும் வாயைத் துணியால் மூடிக்கொண்டு தம் தொண்டைப் புரிவார்கள். தேவி இதை மறந்து கையிற் கிடைத்த மலரை மோந்து பார்த்தாள்.

அப்போது அங்கே செருத்துணே நாயனர் என்பவர் வந்தார். அவர் சிவாபராதம் செய்பவர்களே உடனே கண் டிப்பார்; அவசியமானல் தண்டிப்பார். பட்டத்தரசி மலரை மோந்து பார்ப்பதற்கும் அவர் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. ‘இறைவனுக்குரிய மலரை யாரோ ஒரு பெண் இவ்வளவு துணிச்சலாக எடுத்து மோந்து பார்க் கிருளே! என்று அவருக்குக் கோபம் வந்து விட்டது. வாளே யெடுத்தார்; சரசர வென்று அரசியைப் பற்றி அவள் மூக்கை அரிந்து சிறிதும் அஞ்சாமல் கின்ருர். மூக்கிலிருந்து குருதி சோரக் கீழே விழுந்தாள் அரசி, மயில் தளர்வது போல் தளர்ந்து புலம்பினுள். தரிசனம் செய்துவிட்டு அப்பக்கமாகக் கழற்சிங்கர் வந்து பார்த்தார்; தம் மாதேவி குருதி வாரக் கீழே கிடந்து புரளுவதைக் கண்டார்.

'இந்தச் செயலே அஞ்சாமல் செய்தவர் யார்?' என்று கோபத்துடன் கேட்டார்.

அப்போது செருத்துணே நாயனர் முன்னே வந்து, 'நான்தான். இது செய்தேன்; அதற்குத் தக்க காரணம் உண்டு” என்ருர். அவருடைய சைவத் திருக்கோலத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/80&oldid=585714" இலிருந்து மீள்விக்கப்பட்டது