பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழற்சிங்க நாயனுர் 75,

கண்டவுடன் கழற்சிங்கர் கோபம் பெரிதும் ஆறியது; காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் ஓங்கியது.

'சிவபிரானுக்குரிய மலரை மோந்து பார்த்த பிழை. யைச் செய்தமையால் அந்த மூக்கைக் குறைத்தேன்' என்ருர் செருத்துணையார். h

"மலர் போனல் வேறு மலர் வரும்; மூக்குப் போல்ை வேறு மூக்கு வருமா?" என்று அரசர் கேட்கவில்லை. சிவா பராதம் என்பது சிறிதாலுைம் பெரிதானலும் தண்டிப் பதிற்குரியது என்பதைச் செருத்துணையாரைப் போலவே அவரும் உணர்ந்தார். நெருப்புப் பொறியில் சிறிதென்றும் பெரிதென்றும் வேறுபாடு உண்டா? சிறு பொறியே பெருங் தீயாகி ஊரைக் கொளுத்தி விடும் அல்லவா? உலகுக்கு ஒழுக்க முறையைக் காட்டுவது அரசர் கடமை. அரச ருக்கு உவந்த சுற்றத்தாருள் அரசனுடன் சிங்காதனத்தில் இருந்து மணிமுடி குடிப் பெருமை பெறும் உரிமை மாதேவிக்கு உண்டு. அரசனுக்குரிய பொறுப்புக்களில் அவளும் பங்கு கொள்ளுவதற்கு உரியவள். அத்தகை யவள் இந்த அபசாரத்தைச் செய்தால் குடிமக்கள் எசமாட் டார்களா? தம் மனைவி என்று அரசர் தண்டிக்கவில்லை என்ற பழி கழற்சிங்கருக்கு வருமே!

இப்படி யெல்லாம் எண்ணங்கள் மன்னர்பிரான் உள் ளத்தில் ஒடியிருக்க வேண்டும். -

"நீங்கள் முறைப்படியே தண்டனை அளிக்கவில்லை” என்று அமைதியாகச் சொன்னர் பல்லவ மன்னவர்.

‘முறை என்பதற்கு என்ன பொருள்? அரசர் எதைக் கருதி இப்படிச் சொல்கிருர்? என்று அருகில் உள்ளவர் கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, "மலரை எடுத்து மோந்தது குற்றங்தான். ஆனல் மோந்த குற்றத் துக்குமுன் எடுத்த குற்றத்தைச் செய்தது. கை. கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/81&oldid=585715" இலிருந்து மீள்விக்கப்பட்டது